Asianet News TamilAsianet News Tamil

என்கவுண்டர் செய்த போலீஸ் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்..!! உச்ச நீதி மன்றத்தில் வழக்கு..!!

சட்ட விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கும் பட்சத்தில், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த காவல்துறையினர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

advocate public litigation at supreme court on telangana encounter police
Author
Delhi, First Published Dec 7, 2019, 1:57 PM IST

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் எரித்துக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் என்கவுன்டர் செய்த காவல்துறையினருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜிஎஸ் மணி மற்றும் பிரதீப் குமார் யாதவ் ஆகியோர்  வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கும் பட்சத்தில், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த காவல்துறையினர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

advocate public litigation at supreme court on telangana encounter police

ஐதராபாதில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த வழக்கிர் குற்றம் சாட்டப்பட்ட  நான்கு பேரையும் போலீசார் 'என்கவுன்டரில்' சுட்டுக் கொன்றனர். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதை அடுத்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாருக்கு நாடு முழுவதும் பாராட்டு குவிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.  இங்குள்ள சம்ஷாத் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண் மருத்துவர் கடந்த 27ம் தேதி இரவு மருத்துவமனையில் பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.   

advocate public litigation at supreme court on telangana encounter police

பெங்களூரு - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொண்டுபள்ளி சோதனைச் சாவடி அருகே வந்தபோது அவரது இரு சக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. அங்கு நின்றிருந்த லாரி தொழிலாளர்கள் நான்கு பேர் அவரிடம் வந்து உதவுவது போல் நடித்து அருகில் உள்ள மறைவான பகுதிக்கு கடத்திச் சென்றனர் பெண் மருத்துவரை சரமாரியாக தாக்கி அவரது வாயில் மதுவை ஊற்றினர். பின் ஒருவர் பின் ஒருவராக அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். பின் அருகில் உள்ள ஒரு பாலத்துக்கு கீழே உடலை இழுத்து வந்து பெட்ரோல் ஊற்றிதீவைத்துதப்பி ஓடினர். 

advocate public litigation at supreme court on telangana encounter police

அடுத்த நாள் காலையில் போலீசார் அவரது உடலை கண்டுபிடித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் லாரி தொழிலாளர்கள் முகமது ஆரீப் 36, ஜொலு நவீன் 20, ஜொலு சிவா 20, சென்ன கேசவலு 20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானாவில் நடந்த இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தில் இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'குற்றவாளிகளை எந்தவித விசாரணையும் இன்றி துாக்கிலிட வேண்டும்' என பெண் எம்.பி.க்கள் ஆவேசப்பட்டனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. advocate public litigation at supreme court on telangana encounter police

இதையடுத்து நான்கு பேரையும் தெலுங்கானா மாநிலம் சைபராபாத் போலீசார் நேற்று முன் தினம் அதிகாலையில் கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று 'குற்றம் எப்படி நடந்தது' என்பதை நடித்துக் காட்டும்படி கூறினர்.இதற்கு பின் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நேற்று அதிகாலை தொண்டுபள்ளி சுங்கச் சாவடிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பெண் மருத்துவரின் இரு சக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது குறித்தும் அவரை கடத்திச் சென்றது குறித்தும் அவர்கள் நடித்துக் காட்டினர். 

advocate public litigation at supreme court on telangana encounter police

பாலியல் பலாத்காரம் நடந்த இடத்துக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது நான்கு பேரில் இருவர் போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மற்ற இருவரும் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேரும் கொல்லப்பட்டனர். இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios