ஆதார் அட்டை தொடர்பான தனிநபர் ரகசியம் என்பது மாட்டிறைச்சி விவகாரத்துக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளது.

மகாராஷ்ட்ரா  விலங்குகள் பாதுகாப்பு சட்டம்–1995 பிரிவு 5 (டி) மற்றும் 9 (பி)–ன் படி மாட்டிறைச்சி வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்திருந்ததது.  இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த  மும்பை உயர்நீதிமன்றம் மாட்டின் இறைச்சியை வைத்திருத்தல் குற்றமாகாது எனவும்  மாநில அரசின் இந்த சட்டம் தனிநபர் ரகசியத்தில் தலையிடும் செயல் எனவும் அறிவித்தது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்ட்ர  அரசும், பல்வேறு அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தன. இந்த வழக்குகள் தற்போது  நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ‘தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை’ என தீர்ப்பளித்தது. ஒருவர் எதை சாப்பிட வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? என யாரும் கட்டாயப்படுத்த முடியாது என அப்போது கூறிய நீதிபதிகள், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவரவர் தனிப்பட்ட ரகசியம் எனவும் தெரிவித்தனர்.

ஒருவரின் உணவு தேர்வு என்பது தனிநபர் ரகசியமாக தற்போது பாதுகாக்கப்பட்டு உள்ளது. எனவே   jpdjpdjpஇந்த வழக்க  தீர்ப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு நீதிபதிகள் பதிலளிக்கையில், ‘ஆம். அந்த தீர்ப்பு (தனிநபர் ரகசியம்) இந்த மாட்டிறைச்சி தொடர்பான விவகாரங்களுக்கும் பொருந்தும்’ எனக்கூறினர்.