செக்ஸ் குற்றங்களில் சிக்கி ஏராளமான சாமியார்கள் வௌி உலகுக்கு  கடந்த காலங்களில் அம்பலமாகி உள்ளனர்.  அதில் வயதான சாமியார் ஆசராம் பாபு முதல், நேற்று முன்தினம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சாமியார் ராம் ரஹீம் வரை அடங்கும்.

ராம் ரஹீம் சிங்

அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரேதேசங்களில் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தை நடத்தி வருபவர் 50 வயதான சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் கடந்த 2002ம் ஆண்டு தனது பெண் சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

கடந்த 15 ஆண்டுகள் நடந்த விசாரணையின் முடிவில் சாமியார் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 லட்சமும் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருக்கும் தலா ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

ஆசராம் பாபு

76 வயதான சாமியார் ஆசராம் பாபு. பிரம்மச்சரியத்தை கடைபிடித்து, பெற்றோர்களையும் வழிபட வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு போதித்து வந்தவர் ஆசராம் பாபு. இந்தியாவுக்குள் காதலர் தினம் கொண்டாடக்கூடாது, அது மேற்கத்திய நாகரீகம் என்று தீவிரமாக பிரசாரம் செய்தவர் ஆசராம் பாபு.

இந்நிலையில் சாமியார் ஆசராம் பாபு மீதும், அவரின் மகன் நாராயன் சாய் மீதும் பலாத்கார புகாரை ஒரு பெண் அளித்தார். இதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், ராஜஸ்தானில் உள்ள தனது ஆசிரமத்தில் பள்ளிச்சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும் ஆசராம் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இப்போது, ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் ஆசராம் பாபு அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருக்கும் ஆசராம்பாபு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு எப்போது ஆஜரானாலும், அவரைக் காண ஆதரவாளர்கள் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது. 

நாராயண் சாய்.

ஆசராம் பாபுவின் மகன் நாராயண் சாய். இவரும் பலாத்கார புகாரில் சிக்கி சிறையில் உள்ளார். சூரத்தில் உள்ள ஆசிரமத்தில் பணியாற்றிய ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் 8 பெண்களுடனும் தவறான உறவு வைத்து இருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

கங்காநந்தா தீர்த்தபதா

கேரள மாநிலம், கொல்லம் நகரில் தன்னை கடவுளாகக் கூறிக்கொண்டு பிராசாரம் செய்து வருபவர் தீர்த்தபதா. இவர் சட்டக்கல்லூரி மாணவி ஒருவருக்கு பரிகாரம் செய்கிறேன் என்று ஏமாற்றி, கடந்த 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்துள்ளார். அந்த சட்டக் கல்லூரி மாணவியின் குடும்பத்தாருக்கும் அந்த சாமியார் மிகவும் நெருக்கமாக இருந்து பூஜைகள் செய்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். சாமியார் கொடுமை தாங்க முடியாமல், ஒருநாள் அந்த மாணவி அவரின் ஆண்உறுப்பை கத்தியால் நறுக்கினார். இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.

மெகந்தி காசிம்

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சாமியார் காசிம். இவர் 7 சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்களை குணமாக்குகிறேன் என்று கூறி அவர்களின் பெற்றோர்களிடம் கூறி சாமியார் வைத்தியம் செய்துள்ளார். மேலும், அந்த பெற்றோருக்கு இருக்கும்பெண் குழந்தைகளுக்கும் இதுபோல் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்துவிடக்கூடாது அதற்கு சிறப்பு பூஜை செய்கிறேன் என்று கூறி அந்த சிறுமிகளை பலாத்காரம் செய்துள்ளார் சாமியார் காசிம்.

சந்தோஷ் மாதவன் என்ற சுவாமி அமிர்தா சைதன்யா

கேரளாவைச் சேர்ந்த சாமியார் மாதவன், கடந்த 2009ம் ஆண்டு 3 சிறுமிகளை பலாத்காரம் செய்த  குற்றத்துக்காக நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டார். ஏழை குடும்பங்களில் இருந்து சிறுமிகளை படிக்க வைக்கிறேன் என்று கூறி அழைத்து வந்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும், துபாயைச் சேர்ந்த  ஒரு பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடியும் செய்து குற்றமும் இவர் மீதும் உள்ளது. 

பிரேமானந்தா

இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தா அங்கு போர் காரணமாக இந்தியாவுக்கு கடந்த 1984ம் ஆண்டு வந்து, திருச்சியில் ஆசிரமம் தொடங்கினார்.கடந்த 1994ம் ஆண்டு அந்த ஆசிரமத்தில் பணியாற்றிய ஒரு பெண் பிரேமானந்தா தன்னை பலாத்காரம் செய்ததால் கர்ப்பமாக இருக்கிறேன் என்று புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு நடந்த விசாரணையில், கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் பிரேமானந்தா, உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

ஞானசைதன்யா

3 கொலை வழக்கு தொடர்பாக 14 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் ஞானசைதன்யா. சிறைவாசத்துக்குபின், வௌியே வந்த சைதன்யா, இங்கிலாந்து குடும்பத்தினர் ஒருவரின் மகள் தனது முற்பிறவியில் தன் மனைவி என்று கூறி, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தினார். அதன்பின் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசைதன்யா மீண்டும் கைது செய்யப்பட்டார்.

நித்யானந்தா

கர்நாடகத்தில் பிடரி எனுமிடத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் நித்யானந்தா. இவர் மீது ஏராளமான பாலியல் புகார்கள் வௌியே வந்தநிலையில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவல்லை. இருப்பினும் பல்வேறு சர்ச்சைளுடன் தொடர்ந்து நித்யானந்தா தனது ஆசிரமத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.