நாடு முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில்,16 வயது பெண்ணை, 3 பேர் வலுக்கட்டாயமாக அருகில் உள்ள காட்டுக்குள் அழைத்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்வி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைப்பெற்று உள்ளது.

வறுமையில் வாடும் தன் குடும்பத்தை காப்பாற்ற, தாய் அருகில் அருகில் இருக்கும் பகுதியில் வேலைக்கு சென்று உள்ளார். அவருக்கு, மதிய உணவு கொடுக்க வேண்டும் என, அவருடைய  மகள் சென்று உள்ளார்.

அப்போது, இவர்களை வழிமறித்த இளைஞர் கும்பல் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டுக்குள் இழுத்து சென்று  உள்ளனர்

பட்டப்பகலில் ஒரு பெண்ணுக்க இப்படி ஒரு நிலை ஏற்படுவதை பார்த்து மக்கள் கடும் கொந்தளிப்பை தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரம், தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருவதால், இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த நபர்கள் யார்..? அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமைகள்..உடன் வந்த நண்பர்கள் யார் என்ற பல கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.