ஆக்ராவை சேர்ந்த 15 வயது மாணவனை 25 வயது ஆசிரியை ஒருவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து தனது சகோதரி மற்றும் சகோதரருடன் சேர்ந்து அவனை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி ரூ. 30 லட்சம் பறித்து உள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.

மாணவனை மிரட்டிய அந்த ஆசிரியையின் பெயர், ரூச்சி சிங்கால். அவர் மாணவரை ஆபாசமாக வீடியோ எடுத்து உள்ளதாகவும் அதனை ஆன்லைனில் பரவ செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போன மாணவன் தனது சொந்த வீட்டில் இருந்து பணம், நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை திருடி கொடுத்து உள்ளான்.

இது குறித்து அந்த மாணவன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

ஒரு வருடத்திற்கு முன் கச்சேரி கேட் பகுதியில் உள்ள ரூச்சி சிங்காலின் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். நிதின் சிங்கால் மற்றும் அவரது சகோதரி ரூச்சி சிங்கல் எனக்கு கற்று கொடுத்து வந்தனர்.

பின்னர் ரூச்சி மற்றும் அவரது விவகாரத்து பெற்ற சகோதரி அஞ்சலி எனக்கு பழக்கமானார்கள். ஒருநாள் அவர்கள் எனக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்தார்கள்.

அதில் நான் மயக்கம் அடைந்தேன் அப்போது அவர்கள் என்னை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பின்னர் அதனை இணையதளங்களில் வெளியிடுவதாக கூறி என்னை மிரட்டினர்.

முதலில் நான் என் வீட்டில் இருந்து ரூ. 4 ஆயிரம் திருடி கொண்டு வந்து கொடுத்தேன். பின்னர் தொடர்ந்து 10,000 ரூபாய் மற்றும் 45,000 என இரண்டு சந்தர்ப்பங்களில் திருடி கொண்டுவந்து கொடுத்தேன்.

தொடர்ந்து அவர்கள் என்னை கட்டாயபடுத்தி ஆபாசபடங்களை பார்க்க வைத்தனர். பின்னர் பாலியல் செயலில் ஈடுபட தூண்டினர். பின்னர் அதனை வீடியோ எடுத்து மிரட்டினர். அவரகளிடம் நான் அந்த வீடியோவை அழித்து விடும்படி கெஞ்சினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

தொடர்ந்து அவர்களின் வற்புறுத்தலின் பேரில் என் பாட்டியின் லாக்கரில் இருந்து விலைமதிப்பற்ற நாணயங்கள் மற்றும் உலோகங்களை திருடி கொண்டுவந்து கொடுத்தேன். மொத்தம் ரூ.30 லட்சம் அளவுக்கு பணம் கொடுத்து இருக்கிறேன்

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

ரூச்சி சிங்கால் அவரது சகோதரி மற்றும் சகோதரர், இதே போல் பல பணக்கார மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் ரூச்சி, நிதின் அஞ்சலி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது குழந்தைகள் பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மிரட்டி பணம் பறித்தல் என்ற பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.