Asianet News TamilAsianet News Tamil

வீட்டுக்கு கிளம்பும் 80 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் !! விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டும் அரசு !!

விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்களை வேலையை விட்டு கிளப்ப மத்திய அரசு அதிரடி பிளான் வகுத்துள்ளது.

80 thousand bsnl employees going to vrs
Author
Mumbai, First Published Nov 7, 2019, 7:19 AM IST

பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் பி.கே.புர்வார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் விருப்ப ஓய்வுத்திட்டம் மிகச்சிறப்பான ஆகும். இந்த திட்டம் அடுத்த மாதம் 3-ந்தேதி வரையில் அமலில் இருக்கும். இதையொட்டி ஊழியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் உள்ள 1½ லட்சம் ஊழியர்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வுக்கு தகுதி பெறுகிறார்கள்.

50 வயதை அடைந்தவர்கள், அதற்கு கூடுதலான வயதினர் விருப்ப ஓய்வு வரம்புக்குள் வருகிறார்கள்.

80 thousand bsnl employees going to vrs

80 ஆயிரம் ஊழியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி விருப்ப ஓய்வு பெற முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நிறுவன ஊழியர்களுக்கான சம்பள செலவு ரூ.7 ஆயிரம் கோடி குறையும் என கூறினார்.

மேலும் அவர் பிஎஸ்என்எல்  ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதையும் அவர் வெளியிட்டார்..

* பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.

* பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும்.

80 thousand bsnl employees going to vrs

இதே போன்று எம்.டி.என்.எல். ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டமும் அடுத்த மாதம் 3-ந் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.

நஷ்டத்தில் இயங்கி வருகிற பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை இணைத்து புத்துயிரூட்டவும், அவற்றின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தவும் ரூ.69 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசு கடந்த மாதம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios