கேரளாவில் 90 வயது மூதாட்டியை 50 வயதுடைய மருமகன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், மெப்பயூர் பகுதியில், தனது மகளின் வீட்டுக்கு அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வருவர் 90 வயது மூதாட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர், மூதாட்டியின் மகள் உறவினர் ஒருவரைப் பார்க்க சென்று விட்டார். 

மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில், மகளின் கணவர் (50) மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தவர், அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

அவரை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சம்பவத்தின்போது அந்த நபர் போதையில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி, கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மது போதையில் 90 வயது மூதாட்டியை மருமகனே பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.