Asianet News TamilAsianet News Tamil

கதறிய நிர்பயாவின் தாய்... விலகி விலகி இறுக்கிய தூக்கு கயிறுக்கு நேரம் குறித்த நீதிமன்றம்...!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் உள்ளிட்ட 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 

2012 Delhi gang-rape case: The four convicts to be executed on 3rd March at 6 am
Author
Delhi, First Published Feb 17, 2020, 4:31 PM IST

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் உள்ளிட்ட 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 2012 Delhi gang-rape case: The four convicts to be executed on 3rd March at 6 am

இந்நிலையில், தண்டனையில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு, மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவதில் குழப்பத்தை ஏற்படுத்தி 2 முறை தள்ளிப்போனது. இந்நிலையில், நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு எதிராக புதிய தூக்கிலிடும் உத்தரவு பிறப்பிக்கக் கோரி அரசு மற்றும் நிர்பயாவின் பெற்றோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மேந்தர் ராணா, 4 குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கை ஒத்திவைத்தார். 

2012 Delhi gang-rape case: The four convicts to be executed on 3rd March at 6 am

இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்பயா தாய்;- நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் தற்போது நம்பிக்கை மற்றும் உறுதியை இழந்து நிற்கிறேன். என் மகளுக்கு நீதி கிடைக்க நான் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த குற்றவாளிகள் தந்திரங்களை பயன்படுத்தி தண்டனையை தாமதப்படுத்தி வருகின்றனர். தண்டனையை தாமதிக்க முயல்கின்றனர் என்பதை நீதிமன்றம் ஏன் புரித்துகொள்ளவில்லை, நீதி மீதான நம்பிக்கையை இழந்து வருகிறோம் கதறியபடி தெரிவித்த்தார்.

இதையும் படிங்க;-   இதையும் படிங்க;- நீதி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்... நீதிமன்றத்தில் கதறிய நிர்பயாவின் தாய்...!

2012 Delhi gang-rape case: The four convicts to be executed on 3rd March at 6 am

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி தர்மேந்தர் ராணா முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளை தூக்கிலிடும் பணி நடைபெற்று வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios