கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை பிஷப் ஒருவர் 13 முறை கற்பழித்தாக போலீசில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சம்பவம் நடந்திருந்தாலும், இதுதொடர்பாக  மறைமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் தற்போது போலீசில் அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் குருவிலங்காடு என்ற இடத்தில்  கோட்டயம் ஆர்.சி.மறை மாவட்டத்துக்குட்பட்ட ஆதரவற்றோர் இல்லம் ஒன்று இயங்கி வருகிறது. அதில் நிர்மலா என்ற கன்னியாஸ்திரி  சேவை செய்து வருகிறார். கடந்த  2014 ஆம் ஆண்டு அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்த கோட்டயம் மறைமாவட்ட  பிஷப்,  அருகில் உள்ள விருந்தினர் இல்லத்துக்கு நிர்மலாவை அழைத்துச் சென்று து கற்பழித்துள்ளார்.

இதையடுத்து  தொடர்ந்து 13 முறை அங்கு ஆய்வு செய்ய வந்த பிஷப் ஒவ்வொரு முறையும் நிர்மலாவை கற்பழித்துள்ளார். பின்னர் அந்த பிஷப் வட இந்தியாவில் உள்ள ஒரு மறை மாவட்டத்தின்  பிஷப்பாக மாறுதல் செய்யப்பட்டார்.

இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து நிர்மலா என்ற அந்த கன்னியாஸ்திரி  கோட்டயம் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அந்த பிஷப் தன்னை 13 முறை கற்பழித்தாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முன்பு பிஷப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சர்ச் அதிகாரிகளிடம்  பலமுறை புகார் அளித்தும் அவர்கள் அதை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அதன் பின்னர்தான்   தற்போது போலீசில் புகார் தெரிவித்ததாக குறிப்பிட்டார்..

.இதனிடையே  வட இந்தியாவுக்கு மாற்றல் ஆகிப்போன பிஷப், கன்னியாஸ்திரிக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதில் தான் அவருக்கு இடம் மாறுதல் அளித்ததால் பழிவாங்கவே இவ்வாறு புகார் அளித்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

.இதையடுத்து அவர்கள் இருவர் அளித்துள்ள புகார்கள் மீது  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கேரளாவில் பெண்  ஒருவரை 5 பாதிரியார்கள் மிரட்டி மாறி மாறி கற்பழித்த விஷயம் வெளியில் வந்தது. இந்நிலையில் அதே போன்று கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கன்னியாஸ்திரியை கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.