ஆன்மீகத்தின் மீது மக்களுக்கு பொதுவாக எந்த அளவிற்கு, நம்பிக்கை உள்ளதோ... அதே அளவிற்கு அமானுஷ்ய சக்திகள் மீதும் நம்பிக்கை உள்ளது. பல நூல்கள் வாழ வழி காட்டினாலும் சில நூல்கள் எப்படி இறந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பது போன்ற ஒரு சில அமானிஷ்ய விஷயங்களையும் மக்கள் மனதில் கொண்டு போய் சேர்க்கிறது.

இந்நிலையில், இது போன்ற அமானுஷ்ய புத்தகங்களை படித்து, 11 பேர் டெல்லியில் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

நேற்று டெல்லியில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் கண்களும், வாய்களும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. இதில் 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அட்டங்குவர். ஒரு மூதாட்டியை மட்டும் சிலர் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரை தூக்கில் தொங்க விட்டது தெரியவந்துள்ளது.

கடன் பிரச்சனையா..?

குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாக இப்படி தற்கொலை செய்துள்ளதால், இவர்கள் ஏதேனும் மீள முடியாத கடன் பிரச்சனையில் இருந்திருப்பார்களோ என சந்தேகம் பொலிசாருக்கு இருந்தது. ஆனால் இவர்கள் எந்த பண கஷ்டமும் இன்றி, மிகவும் சொகுசாக வாழ்ந்ததும். இவர்களுக்கு நிறைய சொத்துக்கள் இருப்பது, எந்த கடனும் பிரச்சனையும் இல்லை என பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

வீட்டில் நடந்த சோதனை:

பின் வீடு முழுவதையும் சோதனை செய்த போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது. இந்த வீட்டில் இருந்து நிறைய கடிதங்கள் மட்டும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது.

அமனுஷம்:

இவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப் பட்ட புத்தகங்களில் முழுக்க முழுக்க, மறுவாழ்வு, அமானுஷ்யம், சொர்க்கம் செல்வது எப்படி, எப்படி தற்கொலை செய்தால் சொர்க்கம் போன்ற புத்தகங்கள் கிடைத்தது.

கடிதம்:

மேலும் இவர்களுடைய வீட்டில் இருந்து முக்கிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் நம்முடைய கண்களையும், வாயையும் மூடிக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டால் நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்று எழுதி இருந்தது. 

பின் தான் போலீசாருக்கு இவர்களுடைய தற்கொலைக்கான காரணம் புரிந்தது. இது போன்ற புத்தகங்களில் எழுதி இருந்த அமானுஷ்ய விஷயங்களை நம்பி இவர்கள் தற்கொலை செய்துக்கொண்டது. இந்த சம்பவம் டெல்லி புராரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.