தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மித் ராம் ரஹீம் சிங் ‘ராக் இசை’ பாடகராக வலம் வந்தார். ‘ ஹைவே லவ் சார்ஜர்’, ‘நெட்வொர்க் தேரா லவ்கா’, ‘லவ் ராப் சீ’ உள்ளிட்ட பல பாடல் கேசட்டுகளை வௌியிட்டுள்ளார். இவரின்‘ஹைவே லவ் சார்ஜர்’ கேசட் ஆல்பம் அறிமுகம் செய்யப்பட்ட 3 நாளில் 30 லட்சம் விற்பனையானது. 

மது, போதை மருந்துகள், ஒழுக்கமின்மை ஆகியவற்றை ஒழிக்கும் வகையில் என்னுடைய பாடல்களும் இருப்பதாகவும், அது மாற்றத்தை உங்களிடம் உண்டாக்கும் என் சாமியார் குர்மீத் சிங் தனது ஆதரவாளர்களிடம் கூறிவந்தார். 

குர்மீத் சிங் தலைமையில் தேரா சச்சா சவுதா அமைப்பு பல கின்னஸ் சாதனைகளை படைத்தது. ஒரே நாளில் மிக அதிகமான தொண்டர்களை வைத்து ரத்த தான முகாம் நடத்தி கின்னஸ் சாதனை படைத்தார். ஏராளமான மரங்களை நட்டார், மனித நேய உதவி செய்ய, தினந்தோறும் ஒரு ரூபாய் தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காசுகளை விட்டெறியும் நிகழ்ச்சி நடத்தியது

கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குர்மித் சிங், ‘  தி மெசஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்தை இயக்கி வௌியிட்டார்.  இந்த திரைப்படம் ஆன்மீகம், பொழுதுபோக்கு இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை உள்ளடக்கி இருந்தது என்று குர்மீத்தெரிவித்தார். 


குர்மீத்தின் இணையதளத்தில் தன்னை பற்றி அவர் குறிப்பிடும் போது, எழுத்தாளர்,கண்டுபிடிப்பாளர், வேளாண் வல்லுநர், அறிவியல் விஞ்ஞானி, தடகள வீரர், பன்முக திறமை கொண்டவர், அறிஞர், இயக்குநர், இசையமைப்பாளர், கெட்ட பழக்கங்களில் சிக்கி இருப்பவர்ளை மீட்பவர் என்று பெருமையாக பட்டங்கள் கொடுத்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு வரை, குர்மீத் சிங்குக்கு நாடுமுழுவதும் 46 ஆசிரமங்கள் இருக்கின்றன. கடந்த 1990ம் ஆண்டு தேரா அமைப்புக்கு குர்மீத் தலைவராக வந்தபின், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், டெல்லி, கங்காநகர், ஹனுமன்கார்க், கோட்டா, சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், மைசூர், பூரி(ஒடிசா) ஆகிய மாநிலங்களில் ஆசிரமத்தை திறந்தார்.

தேரா சச்சா சவுதா அமைப்பை ஏறக்குறை 5 கோடி பேர் பின்பற்றி வருகிறார்கள், இதில் அரியானா மாநிலத்தில் மட்டும் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று கடந்த 2014ம் ஆண்டு குர்மீத் சிங் பெருமையாகக் கூறி இருக்கிறார்.

அரியானாவில் பா.ஜனதா கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற தேராசச்சா சவுதா அமைப்பு முக்கியக் காரணமாக அமைந்தது. பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் குர்மீத்சிங்கை சந்தித்து ஆதரவு கோரினார்கள். ஆனால், தேர்தலில் தேரா ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா, பதேபாத் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிர்சா நகரில் இருக்கும் தேரா சச்சா சவுதா தலைமையகம் சிறிய நகரம் போல் அமைக்கப்பட்டு இருக்கும். 2 கி.மீ தொலைவுக்கு கடைகல், வீடுகள், மருத்துவமனை, தொழிற்சாலை, உற்பத்திக் கூடம் என குர்மீத்தின் ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர்.

சாமியார் குர்மீத்தின் தீவிர ஆதரவாளர்களாக இந்தி நடிகை மணிஷா கொய்ராலா, கிரிக்கெட் வீரர்கள் விராத் கோலி, ஜாகீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, யூசுப் பதான், சிகார்தவான், பிரவீண்குமார், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் ஆகியோர் உள்ளனர்.