மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ இரும்புப் பொருட்கள் மற்றும் அணிகலன்கள் இருந்ததை கண்டு மருத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

மகாராஷ்டிராவில் உள்ள சீரடி மனநலம் பாதிக்கப்பட்டதால், வீட்டில் இருந்து தப்பித்து அகமதாபாத்தில் உள்ள ஷகர்கொடா நகரின் விதிகளில் சுற்றிதிரிந்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 31ம் தேதி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

சங்கீதாவின் வயிறு சங்கீதாவின் வயிறு அளவுக்கு அதிகமாக பெரிதாக காணப்பட்டது. தொடர்ந்து அவர் வயிற்று வலியாலும் துடித்துவந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அப்போது வயிற்றில் குவியலாக உலோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவை அவரது வயிற்றில் உள்ள உள்பாகங்களை குத்தி கிழித்துள்ளன. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதில் சங்கீதாவின் வயிற்றில் இருந்து இரும்பு ஆணிகள், ஊசிகள், பிரேஸ்லெட், செயின், வளையல், செப்பு மோதிரம் என சுமார் ஒன்றரை கிலோ பொருட்கள்  வெற்றிகரமாக மருத்தவர்கள் அகற்றினர். சங்கீதா அக்யூபாகியா என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நோய் பாதித்தவர்கள் கூர்மையான பொருட்களை விழுங்கி விடுவார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.