சுய ஊரடங்கான நாளை தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாது என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் ருத்தரதாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ள நாடுகளிலேயே நிலைமை சமாளிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-க்கும் மேற்பட்டோர் தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 298-ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஆகையால், 22-ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று  பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்:- சுய ஊரடங்கான நாளை தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாது. வீட்டிலிருப்பது மட்டும் முக்கியமல்ல, வெளியூர் செல்லாமல் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இருப்பதும் முக்கியம். கொரோனா பரவாமல் தடுக்க நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

மருத்துவர்கள், அதிகாரிகளின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது. கொரோனா காரணமாக தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டோர் அதை கடைபிடித்தல் முக்கியமானது. மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொள்வது குடும்பத்தையும், நண்பர்களையும் பாதுகாக்கும். இந்த காலங்களில், எங்கள் ஒவ்வொரு சிறிய முயற்சியும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.