Asianet News TamilAsianet News Tamil

அவுட் என அறிவித்த அம்பயர்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரருக்கு அபராதம்..!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Jason Roy escapes World Cup final ban after dissent fine
Author
London, First Published Jul 12, 2019, 1:22 PM IST

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. பர்‌மிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிக பட்சமாக ஸ்மித் 85 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். Jason Roy escapes World Cup final ban after dissent fine

இந்நிலையில், 224 ரன்களை வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் பேரிஸ்டோ ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர். இந்த வெற்றி இலக்கை 33-வது ஓவரிலேயே எட்டியது. 27 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. 

 Jason Roy escapes World Cup final ban after dissent fine

இந்தப் போட்டியில் அதிரடியை வெளிப்படுத்திய ஜேசன் ராய், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடினார். 20-வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை அடிக்க முயற்சிக்கும்போது, பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது. கேரி, அவுட் என்று முறையிட்டதும் நடுவர் தர்மசேனா, விரலை உயர்த்தி விட்டார். Jason Roy escapes World Cup final ban after dissent fine

அதிர்ச்சி அடைந்த ராய், பந்து பேட்டில் படவில்லை என்று நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். டி.ஆர்.எஸ். வாய்ப்பு பயன்படுத்தப்பட்டு விட்ட தால் வேறு வழியின்றி அதிருப்தியோடு பெவிலியன் திரும்பினார், ராய். டிவி. ரீப்ளேயில் அது அவுட் இல்லை என்று தெளிவாக தெரியவந்தது. ராய், 65 பந்தில், 5 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்திருந்தார். இந்நிலையில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, அவருக்கு போட்டிக் கட்டணத்தில், 30 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios