இந்தியாவில் இருந்தே மலேரியாவை விரட்டலாம்... அதுக்கு உங்கள் ஒத்துழைப்பும் மிக அவசியம் மக்களே!!!
இந்திய நாட்டின் கிழக்கு, மத்தியப் பகுதிகள் மற்றும் காடு, மலை அடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில்தான் மலேரியா நோய் அதிகம் பரவுகிறது.
மலேரியா நோய் அதிகமாக பரவும் இந்தியப் பகுதிகள்...
இந்திய நாட்டின் கிழக்கு, மத்தியப் பகுதிகள் மற்றும் காடு, மலை அடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில்தான் மலேரியா நோய் அதிகம் பரவுகிறது. ஒடிசா, சட்டிஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இவை அதிகம்.
இந்திய நாட்டில் மலேரியாவை தடுக்கும், கட்டுப்படுத்தும் வழிகள்...
1.. மலேரியா நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு உடனே சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
2.. மலேரியாவை உருவாக்கும் கொசுக்களை ஒழிப்பது அல்லது கட்டுப்படுத்துவது மிக முக்கியமாகும். அதிலும், இயற்கை முறைகளில் கொசுக்களை விரட்டுவதுதான் சிறந்தது. கெமிக்கல் கொசுவிரட்டிகளை பயன்படுத்தினால் அவற்றின்மூலம் வேறுபல பாதிப்புகள் வரும். கொசு விரட்ட வீட்டில் சன்னல்களுக்கு வலை இடலாம்.
3.. சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சமுக விழிப்புணர்ஸ்களை மக்களுக்கு ஏற்படுத்தலாம்.
4.. கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து ஒழிப்பது அவசியம்.
இது போன்ற நடவடிக்கைகளை அரசு செய்யும்வரை மக்களும் தங்கள் பங்குக்கு மலேரியாவை பரப்பு கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில் இறங்கலாம். கொசுக்கள் உருவாக்க காரணமான சுற்றுப்புறத் தூய்மையின்மையை உங்களது வீட்டு வாசலில் இருந்து ஆரம்பித்து மலேரியா மட்டுமல்ல எந்தவித நோயையும் அண்டாமல் செய்யலாம். என்ன ஒத்துழைப்பீர்களா?