டைட்டான ஜீன்ஸ்.. ப்ரா.. ஹை ஹீல்ஸ் - இது பெண்களை பெரிதும் பாதிக்குமா?
Unhealthy Fashion : இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று அனைவரும், நவநாகரீக முறையில் தான் வலம்வருகின்றனர்.
பெண்களும், ஆண்களும் ஸ்டைலாக தோற்றமளிக்க பலவிதமான விஷயங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை, குணப்படுத்த முடியாத சில நோய்களுக்கு அவர்களை ஆளாக்குகின்றன என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?. அதில் முதலிடத்தில் இருப்பது ஜீன்ஸ் தான். இந்த காலத்தில் ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் டைட்டான ஜீன்ஸ் அணிய துவங்கிவிட்டனர்.
இந்த ஃபேஷன் உலகில் அப்டேட் ஆகவில்லை என்றால் ட்ரெண்டிற்கு ஏற்றார் போல வாழ முடியாது என்று தான் பலர் நினைக்கிறார்கள். அதில் தவறில்லை என்றாலும், இந்த ஃபேஷன் நம் உடலுக்கு புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களுக்கே தெரியாமல் நோய்களுக்கு ஆளாகின்றனர்.
கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
டைட்டான ஜீன்ஸ்
இப்போதெல்லாம் ஆண்களை விட பெண்கள் தான் இறுக்கமான ஜீன்ஸ்களை அதிக அளவில் அணிகிறார்கள். இது அவர்களின் உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை அளிக்கிறது என்றாலும், பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் இதுவும் ஒன்றாகிறது. இறுக்கமான ஜீன்ஸ் உங்களுக்கு அழகான தோற்றத்தைத் தருவது மட்டுமல்லாமல், தேவையற்ற பிரச்சனைகளையும் கொண்டு வரும். குறிப்பாக டைட் ஜீன்ஸ் அடிவயிற்று பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகமாகும்.
எப்போதும் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இது உங்கள் நரம்பு செயல்பாட்டை பாதிக்கிறது. இது கடுமையான தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ஹை ஹீல்ஸ்
மாடர்ன் மற்றும் வெஸ்டர்ன் உடைகளில், வழக்கமான தட்டையான செருப்புகளுக்கு பதிலாக இப்பொது ஹை ஹீல்ஸ் செருப்புகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. குறிப்பாக உயரம் சற்று குறைவாக இருப்பவர்கள் இந்த வகை காலணிகளை அணிவார்கள். அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், ஆனால் அவற்றை அணிவதால் பல பிரச்சனைகள் ஏற்படும். எப்போதும் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதால் கால் வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் நிரந்தர பிரச்சனைகளாக மாறும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஹை ஹீல்ஸ் அணிவது கணுக்கால், முழங்கால்கள் மற்றும் குதிகால் போன்ற பல பகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அனைத்து அழுத்தமும் பாதத்தின் முன்பகுதியில் தான் சேர்க்கிறது. நாளடைவில், இது முதுகெலும்பு, முழங்கால்கள் மற்றும் பாதங்களில் ஆபத்தான வலி மற்றும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
டைட்டான ப்ரா
இந்த காலகட்டத்தில் பலர் பிராவை அதிகம் பயன்படுத்துகின்றனர், ஆனால் முன்பு இருந்ததுபோல இல்லாமல், இப்பொது பெண்கள் பெரும்பாலும் புஷ்-அப் பிரா, பம்ப் அப் பிரா, பால்கனெட் பிரா, ஸ்ட்ராப்லெஸ் பிரா போன்ற பிராக்களை அணிந்து கவர்ச்சியாகவும் நாகரீகமாகவும் இருக்க விரும்புகின்றனர். பெண்கள் இறுக்கமான பிரா அணிவதால், அது மார்பகங்களில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது சுவாசிக்கும் திறனையும் பாதிக்கிறது, இறுதியில் சுவாச பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
Sleep Divorce பற்றி கேள்விப்பட்டதுண்டா? இதனால் கணவன் மனைவிக்குள் நடப்பது என்ன?