Asianet News TamilAsianet News Tamil

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் தொட்டாற்சுருங்கி செடியை இப்படி சாப்பிட்டாலே போதும்...

People with disabilities have enough food to
People with disabilities have enough food to eat
Author
First Published Jun 28, 2018, 1:44 PM IST


காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடியில் எவ்வளவு அதிசயங்கள் இருக்கு தெரியுமா?

தொட்டாற்சுருங்கி மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

தோல் வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக தொட்டாற்சுருங்கி உள்ளது.

தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும்.

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும்.

சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

தொட்டாற்சுருங்கி இலையையும், வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios