Asianet News TamilAsianet News Tamil

சீழ் நிறைந்த பருக்களை இருந்த இடம் தெரியாமல் போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்...

Home remedies to get rid of pungent bulging ...
Home remedies to get rid of pungent bulging ...
Author
First Published Jul 2, 2018, 1:54 PM IST


சிலருக்கு முகத்தில் வெள்ளை நிறத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வரும். இந்த மாதிரியான பருக்கள் வலியுடன், அரிப்பையும் உண்டாக்கும். இந்த பருக்கள் ஒருவரது முகத்தில் வந்தால், முகம் பொலிவின்றி சோர்வுடன் காட்சியளிக்கும். 

இப்படிப்பட்ட சீழ் நிறைந்த பருக்களை எப்படி சரிசெய்வதென்று பார்ப்போம்...

** மஞ்சளில் உள்ள அழற்சிக்கு எதிரான பண்புகள், சீழ் நிறைந்த பருக்களைப் போக்க உதவும். உங்களுக்கு அடிக்கடி இம்மாதிரியான பருக்கள் வருமாயின், இஞ்சி பேஸ்ட் உடன், மஞ்சள் தூள் சிறிது சேர்த்து பேஸ்ட் செய்து, அதன் மேல் தடவி உலர வைத்து கழுவுங்கள். இதனால் சீழ் நிறைந்த பருக்கள் விரைவில் போய்விடும்.

** டீ-ட்ரீ ஆயில் அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் போக்க வல்லது. குறிப்பாக சீழ் நிறைந்த பருக்கள் மீது இந்த எண்ணெயின் ஒரு துளியைத் தடவினால், விரைவில் அப்பருக்கள் போய்விடும்.

** விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவி வந்தால், விரைவில் பருக்கள் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

** வெங்காயத்தில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மை, பருக்களை போக்க உதவும். அதற்கு வெங்காயத்தை வெட்டி, அதனை பருக்களின் மீது வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வந்தால், சீக்கிரம் சீழ்மிக்க பருக்கள் போய்விடும்.

** முட்டையின் வெள்ளைக்கருவும் சீழ் நிறைந்த பருக்களைப் போக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை பருக்களின் மீது தடவி உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

** பூண்டின் ஒரு துளி சாற்றினை சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சீழ் இறுகி உலர்ந்து உதிர்ந்துவிடும் மற்றும் பருக்களும் மறைந்துவிடும்.

** சீரகத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, சீழ்மிக்க பருக்களின் மீது தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios