Asianet News TamilAsianet News Tamil

கொசுக்கள் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத சில ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி தகவல்கள் இதோ...

கோடைக்காலத்தில்தான் கொசுக்கள் நம்மை தாக்கி ஒருவழிப் பண்ணும். 5 பேரில் ஒருவரை தங்கள் பசிக்காக நாடி வந்து இரத்த உறிஞ்சும். 
 

Here are some surprising and shocking information about mosquitoes ...
Author
Chennai, First Published Aug 31, 2018, 2:10 PM IST

** கோடைக்காலத்தில்தான் கொசுக்கள் நம்மை தாக்கி ஒருவழிப் பண்ணும். 5 பேரில் ஒருவரை தங்கள் பசிக்காக நாடி வந்து இரத்த உறிஞ்சும். 

mosquitoes க்கான பட முடிவு

** உலகில் மொத்தம் 3000 கொசு இனங்கள் இருக்கிறதாம். அவற்றில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 200 கொசு இனங்கள் குடியிருக்கிறதாம். 

** கொசுக்கடியில் இருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வது மூளைக் காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற கொடிய வியாதிகளில் காப்பாற்றிக் கொள்வதற்கு சமம்.

mosquitoes க்கான பட முடிவு

** ஒவ்வோரு வருடமும் உலகம் முழுவதும் 10 முதல் 20 இலட்சம் பேர் வரை கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இறந்தும் போகின்றனர். 

** பொதுவாக நம்மை அடிப்பது ஆண் கொசுக்கள் அல்ல. பெண் கொசுதான். பெண் கொசு தன் முட்டை உற்பத்திக்காக நம் இரத்தத்தில் இருக்கும் புரதம், இரும்புச் சத்து போன்றவற்றை தேடி வருகிறது. 

mosquitoes க்கான பட முடிவு

** நமது உடலில் இருக்கும் கார்பன் டைஆக்சைடு, லேக்டிக் ஆசிட், அம்மோனியா, கார்போக்ஸிலிக் ஆசிட், ஆக்டினால் போன்றவை கொசுக்களுக்கு மிகவும் பிடிக்கும். 

** மனிதர்களை சில கொசுக்கள் கடிப்பதில்லை. மாறாக அவை பல்லி, தவளை, பாம்பு போன்றவற்றை கடிப்பதில் ஆர்வம் காட்டும். 

mosquitoes க்கான பட முடிவு

** ஒரு சாதாரண கொசு ஐந்து முதல் ஆறு மாதங்கல் வரை உயிர் வாழும்.

என்ன இந்த தகவல்களை எல்லாம் கேட்கும்போது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறதா?

Follow Us:
Download App:
  • android
  • ios