பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஓட... ஓட... விரட்டும் ஒரே பானம் இதுதான்..!!
அன்றாட வாழ்வில் நாம் பல உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றன. நமது உடல்நிலை வயது மற்றும் காலநிலை அனைத்தும் பெரும் பங்கு வகிக்கின்றன. பல உடல்நலப் பிரச்னைகளை தவிர்க்க உதவும் பானத்தைப் பற்றிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
மசாலாப் பொருட்களையும் மிதமாக உட்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அதன் மூலம் பருவகால நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
அன்றாட வாழ்வில் நாம் பல உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றன. நமது உடல்நிலை வயது மற்றும் காலநிலை அனைத்தும் பெரும் பங்கு வகிக்கின்றன. பல உடல்நலப் பிரச்னைகளை தவிர்க்க உதவும் பானத்தைப் பற்றிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
பாலை தனியாகக் குடிப்பதற்குப் பதிலாக, பாலில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் பாலில் பட்டைத் தூள் சேர்த்து தயாரிக்க வேண்டும். அதனுடன் உங்களுக்கு விருப்பம் இருந்தால், இனிப்பும் சேர்த்துக்கொள்ளலாம். முடிந்தவரை இந்த பானத்தில் சக்கரையை சேர்க்காமல் குடிப்பது, மேலும் நன்மையை தரும்.
குறிப்பாக குளிர்காலத்தில் இந்த பானத்தை உட்கொள்வதில் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், இதைப் போக்க பாலில் இலவங்கப்பட்டையை சேர்த்துக்கொள்ளலாம். இதை சாப்பிடுவதால் மூன்று முக்கிய ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலின் ஒட்டுமொத்த வலிமையை அதிகரிக்கவும், பல்வேறு தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், மாதவிடாய் வலியைக் குறைக்கவும் இந்த பானம் உதவுகிறது. இலவங்கப்பட்டையில் உள்ள 'சின்னமால்டிஹைட்' என்ற மூலப்பொருள் தொற்றுகளை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கிவி பழத்தின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்..!!
பல பானங்களை உட்கொள்வதற்குப் பதிலாக, கலோரிகளைக் குறைத்து, புரத உட்கொள்ளலை அதிகரிக்கலாம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கிறது. இலவங்கப்பட்டை இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் சக்கரை நோய் கட்டுக்குள் வரும்.
பொதுவாக, அனைத்து மசாலாப் பொருட்களையும் மிதமாக உட்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக பருவகால மழைக்காலத்தில் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. பாலில் இலவங்கப்பட்டை சாப்பிடுவதில் சிரமம் உள்ளவர்கள், தேநீர் அல்லது பழச்சாற்றில் பட்டைத் தூளை கலந்து பருகலாம்.