Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? கருப்பட்டி சாப்பிடுவதால் ஆண்மை வீரியம் அடையும்...

Do you know The masculinity of eating a malnutrition is achieved ...
Do you know The masculinity of eating a malnutrition is achieved ...
Author
First Published Mar 10, 2018, 12:59 PM IST


கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. 

கருப்பட்டியை இனிப்புக்காக மட்டுமல்ல இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மைக்காகவும் தான் பயன்படுத்துகின்றனர். 

கருப்பட்டியின் மருத்துவ குணங்கள்

** இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. 

** பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். 

** மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு வலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.

** சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். 

** ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். 

** குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

** ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. 

** காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.  சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். 

** சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். 

** கருப்பட்டியில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios