Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? ஆண்மை பெருக, நரம்புத் தளர்ச்சி நீங்க முருங்கை கீரை உதவும்...

Do you know Mature gourmet nervous spin
Do you know Mature gourmet nervous spin
Author
First Published Mar 8, 2018, 1:09 PM IST


முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்

** முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால், அசதி நீங்கும்.

** முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும்.

** முருங்கைக் கீரையை உணவுடன் அதிகம் வேகவிடாத பொறியலாக சமைத்து உண்ண கழுத்து வலி படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

** முருங்கைப் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப்படுத்தி, அதை 250 மி.லி. பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து, ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் குடித்து வர ஆண்மை பெருகும். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

** முருங்கைப் பூவே சம அளவு துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் உண்ண கண் எரிச்சல், வாய்க் கசப்பு மாறும்.

** முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios