Asianet News TamilAsianet News Tamil

வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுற ஆளா நீங்க? அப்போ இத கொஞ்சம் படிங்க - மருத்துவர்கள் சொல்லும் ஷாக்கிங் நியூஸ்!

Bread : காலையில் டீ அல்லது காபியுடன் ரொட்டி சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. உண்மையில் வெறும் வயிற்றில் பிரட் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா?

constipation to gastric issues what will happen if you eat bread in empty stomach ans
Author
First Published Aug 6, 2024, 11:58 PM IST | Last Updated Aug 6, 2024, 11:58 PM IST

இந்த காலகட்டத்தில் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கத் தான் விரும்புகிறார்கள், அதற்காக நிறைய விஷயங்களையும் செய்கின்றனர். ஆனால் பலர் செய்யும் சிறு தவறுகள் கூட, அவர்களை நோயாளிகளாக மாற்றிவிடுகிறது. குறிப்பாக பலர் காலை உணவாக ரொட்டியில் செய்யப்பட்ட டோஸ்ட் அல்லது சாண்ட்விச்களை சாப்பிடுகிறார்கள். 

உண்மையில் இரண்டுமே மிகவும் சுவையாகத்தான் இருக்கும், செய்வதும் சுலபம் தான். ஆனால் இவற்றை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் நிச்சயம் பாதிக்கப்படும். ஆம், ரொட்டியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிப்பது மட்டுமின்றி பல நோய்களுக்கு உள்ளாக்குகிறது. 

உடலுறவில் ஆர்வமே இல்லையா? இதை மட்டும் சாப்பிடுங்க.. அசுர பலம் கிடைக்குமாம்..

சர்க்கரை நோய்

நீங்கள் தொடர்ந்து ரொட்டி சாப்பிட்டால், அது நீரிழிவு நோய் உருவாக்கும் ஆபத்தை அதிகரிக்கும். அதுவே உங்களுக்கு ஏற்கனவே சர்க்கரை இருந்தால், நீங்கள் நிச்சயம் ரொட்டி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உண்மையில், வெள்ளை ரொட்டி விரைவாக செரிக்கப்பட்டு குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்துகிறது. தவிர, ரொட்டியில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது, இது உங்கள் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் ரொட்டி சாப்பிடக்கூடாது, மாறாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணலாம். 

எடை அதிகரித்தல்

நீங்கள் உங்கள் எடையை அதிகரிக்க விரும்பவில்லை என்றால், நிச்சயம் ரொட்டி சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். ஏனெனில் ரொட்டியில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் எடையை அதிகரிக்கும். மேலும் வெறும் வயிற்றில் ரொட்டி சாப்பிட்டால் மிக விரைவில் பசி எடுக்கும், பிறகு அதிகமாக அது சாப்பிட தூண்டும்.

மலச்சிக்கல்

காலையில் ரொட்டி சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஏனெனில் ரொட்டி மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இதனை உட்கொள்வதால் மலம் இறுகும், நாளடைவில் அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது. ஒருவருக்கு ஏற்கனவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் காலையில் ரொட்டி சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

இரைப்பை பிரச்சனைகள்

உங்களுக்கு ஏற்கனவே வாயு, அஜீரணம் அல்லது அமிலத்தன்மை போன்ற இரைப்பை பிரச்சனை இருந்தால், நீங்கள் தவறி கூட ரொட்டியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதால் அசிடிட்டி பிரச்சனை அதிகரிக்கிறது.

சளி இருமலை விரட்டி அடிக்க.. நண்டில் இப்படி ஒருமுறை ரசம் வச்சு சாப்பிடுங்க..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios