Asianet News TamilAsianet News Tamil

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க இந்த பழக்கங்களை உடனே நிறுத்துங்க..!!

உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த பழக்கங்களை பின்பற்றுவதை மறந்து விடாதீர்கள். அது என்ன பழக்கங்கள் என்று இப்போது இங்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

be careful these everyday bad habits could harm your liver in tamil mks
Author
First Published Nov 11, 2023, 6:37 PM IST | Last Updated Nov 11, 2023, 6:39 PM IST

நாம் அன்றாட வாழ்வில் வயிறு, இதயம், கண்கள் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்கிறோம். ஆனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.. இது நம் உடலுக்கு மிகவும் முக்கியமான உறுப்பு. எனவே, இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

இருப்பினும், சிலவற்றைத் தவிர்க்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இப்படி இருந்தால்.. கல்லீரல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் சில அன்றாடப் பழக்கங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சில அன்றாடப் பழக்கங்கள் கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சரியாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

be careful these everyday bad habits could harm your liver in tamil mks

ஆரோக்கியமான கல்லீரல்: நாள்பட்ட நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளுமாறு பல சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதைச் செய்யாதவர்களின் உடல் படிப்படியாக வலுவிழந்துவிடும். மேலும், பல பிரச்சனைகளின் துன்பமும் அதிகரிக்கிறது.

இதையும் படிங்க:  கல்லீரலில் இந்த அறிகுறிகள் இருந்தால் அசால்டா இருக்காதிங்க..! விளைவு பயங்கரம்.!!

இந்த உணவுகளை சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்: ருசியை திருப்திப்படுத்த சில உணவுகளை அடிக்கடி சாப்பிட ஆரம்பிக்கிறோம்..அவற்றில் இனிப்புகள், பொரித்த உணவுகள், ஆல்கஹால்..இறைச்சி உணவுகள்.. போன்றவை அடங்கும். இவை நமது உடல் நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க ரெட் மீட், சோடா, குளிர்பானங்கள், ஆல்கஹால், எண்ணெய் நிறைந்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும்.

இதையும் படிங்க: உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால்  அசால்டாக இருக்காதீங்க..! அது கல்லீரல் புற்றுநோயாக இருக்கலாம்..!!

be careful these everyday bad habits could harm your liver in tamil mks

இந்த 3 கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுங்கள்:
ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டுமே சாப்பிடுவது கல்லீரலை சேதப்படுத்தும் என்று நீங்கள் நினைத்தால், இது உண்மையல்ல. அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சில தவறுகள் கல்லீரலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்..

பகலில் தூங்கும் பழக்கம்: சிலருக்கு பகல் தூக்கம் என்ற கெட்ட பழக்கம் இருக்கும். 10 முதல் 20 நிமிடங்கள் வரை ஸ்னூஸ் எடுப்பது எந்தத் தீங்கும் செய்யாது.. ஆனால் பகலில் அதிகமாகத் தூங்கினால் அது தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இது கல்லீரலை பாதிக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இரவு முழுவதும் விழித்திருக்கும் பழக்கம்: சிலருக்கு வெகுநேரம் வரை வேலை செய்வது அல்லது லேட் நைட் பார்ட்டிகளுக்கு செல்வது போன்ற பழக்கம் இருக்கும்.. அதனால் அவர்கள் மிகவும் தாமதமாக தூங்குவார்கள். இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

அதிக கோபமாக இருப்பது: நமது கோபத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நமது மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. எனவே, உங்கள் கோபத்தை குறைத்து, உங்கள் மனநிலையை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios