Asianet News TamilAsianet News Tamil

பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் பாலியல் ஆர்வம் ஏன் குறைகிறது?

பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இதனால் குழந்தை பிறப்புக்கு பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால், பெண்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
 

womens sexual interest decreases after childbirth reasons listed
Author
First Published Jan 15, 2023, 5:30 PM IST

கர்ப்பம் என்பது கணவன்-மனைவி இடையே பந்தத்தை அதிகரிக்கும் ஒரு கட்டம். ஒரு குழந்தையின் வருகை என்பது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. குழந்தை பிறப்புக்கு முன்னதாக இருந்த வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும். பொதுவாக பிரசவத்துக்கு பிறகு ஆண்களுடைய வாழ்க்கையில் பெரியளவில் மாற்றம் இருக்காது. ஆனால் பெண்களுக்கு ஒட்டுமொத்த உடல் இயக்கமுமே மாறுபடும். இதனால் விரும்பிய நேரத்தில் தம்பதிகளால் உடலுறவில் ஈடுபட முடியாது. அப்படியே உடலுறவில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உடல் தேவைகளை கருத்தில்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் பிரச்னை எழுந்தால், உடலுறவு காரணமாக நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இங்குதான் வெறுப்புகள் தோன்றத் துவங்கும். குறிப்பாக பெண்களிடையே பாலியல் வேட்கை குறையும். 

பிஸியான வாழ்க்கை முறை

பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண் பல பொறுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும். இயற்கை பிரசவமாக இருந்தாலும் சரி, சிசேரியனாக இருந்தாலும் சரி, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் பெண் குழந்தையை கவனித்துக்கொள்வதில் அதிக நேரம் செலவிட வேண்டும். சிசேரியனுக்கு பிறகு பிறகு அடிவயிற்றில் ஏற்படும் வலி ஒரு பெண்ணைத் துன்புறுத்தலாம். இதனால் இயற்கையாகவே பாலுணர்வு குறைகிறது.

உடல் மாற்றம்

சில பெண்களுக்கு கர்ப்பத்திற்குப் பிறகு உடலில் மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும். சிலருக்கு உடல் எடை கூடும், அதனால் ஒட்டுமொத்த புற அழகும் பாதிக்கப்படக்கூடும். இது ஆண்களுக்கு தங்களுடைய மனைவிகள் மீதான பாலியல் ஆசை குறைந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி பெண் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்கிறாள். இதன்காரணமாகவும் கணவர் விரும்பி வந்தாலும், மனைவி உடன்படமாட்டார்.  பிரசவத்திற்குப் பிறகு உடலில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வது முக்கியம்.

சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட உதவும் 5 உணவு வகைகள்- இதோ..!!

ஹார்மோன் மாற்றங்கள்

தாய்ப்பால் கொடுக்கும் போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தாலும், ப்ரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடாசின் அளவு அதிகமாக இருக்கும். இவை பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்தும். இரண்டாவது கர்ப்பம் மிக விரைவில் ஏற்படுவதைத் தடுக்க இது உடலியல் ரீதியாக நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதன்காரணமாக பெண்களுக்கு செக்ஸ் டிரைவ் குறைவதற்கு வழிவகுக்கிறது.

சடங்குகள்

இந்தியாவின் சில பகுதிகளில், பாரம்பரியமாக கர்ப்பம் அடையும் பெண் உடனடியாக தாய்வீட்டு அனுப்பப்படுகிறார். பிரசவத்திற்குப் பிறகு 3 மாதங்கள் பெண்கள் கணவரிடம் இருந்து சற்று விலகி இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இது கருவின் வளர்ச்சியை பாதுகாப்பானதாக மாற்றுகிறது. இதன்காரணமாகவும் பெண்களுக்கு செக்ஸ் ட்ரைவ் குறைந்து காணப்படுகிறது. எனினும் சில தம்பதிகளுக்கு பிரசவத்துக்கு பிறகு செக்ஸ் டிரைவ் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios