உங்கள் மீதான கிரெஷ் ஃப்லீங்கை, உங்கள் கிரெஷ்ஷிடம் இருந்து கண்டுப்பிடிக்க எளிய டிப்ஸ்..!!

ஒருவர் மீது நமக்கு காதல் இருக்கும் போதே, வேறொரு சிலரை நமக்கு பிடிக்கும். ஆனால் அது காதலாகிவிடாது. அதை இன்றைய தலைமுறையச் சேர்ந்தவர்கள் ‘கிரெஷ்’ என்று குறிப்பிடுகின்றனர்.  காதல் வேறு கிரெஷ் வேறு என்பது தான் இன்றைய தத்துவம். கல்லூரிக் காலத்தில் இருந்து அலுவலகம், பயணம், தேநீர் விடுதி என வெளியாட்களை சந்திக்கும் பல இடங்களில் நமக்கு அவர்கள் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கும். நம்மையும் அறியாமல் அவர்களுடன் ஒரு இணைப்பு உருவாகிவிடும்.  இது நாளிடைவில் கிரெஷாக மாறிவிடும். இப்படி நமக்கு பலர் மீது கிரெஷ் இருக்கலாம், ஆனால் உங்களுடைய கிரெஷ்க்கும் உங்கள் மீது ஒரு கிரெஷ் உள்ளதா என்று தெரிந்தால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கவுள்ளோம். ஒருவேளை நீங்கள் கமிடட் என்றால், தயவு செய்து இதை முயற்சித்து பார்க்க வேண்டாம். விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

tips to know that your crush also have cursh on you

நீங்கள் உடன் இருப்பது அவர்களுக்கு பிடித்திருக்கும்

ஒருவேளை உங்களுடைய கிரெஷ்க்கும் உங்களின் மீது விருப்பம் இருக்கும் பட்சத்தில், அவர் எப்போதும் உங்களது அருகாமையை விரும்பக் கூடியவராக இருப்பார். மற்ற நண்பர்களைக் காட்டிலும் உங்கள் மீது தனிக் கவனம் தருவது போல இருக்கும். மிக இயல்பாக தொட்டுப் பேசுவது, செல்போனில் சேட் செய்யும் போது அதிகமாக எமோட்டிக்கான்ஸை பயன்படுத்துவார்கள், அதேபோல தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் விருப்பங்களை உங்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்வார்கள். இதுபோன்று மேல்கூறப்பட்டவை உங்களுக்கு நடந்தால், உங்களுடைய கிரெஷ்க்கும் உங்களை பிடித்திருக்கிறது என்று பொருள்.

உங்களை பின்தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்

நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ, யாரிடமெல்லாம் பேசுகிறீர்களோ, என்னவெல்லாம் செய்கிறீர்களோ அதை கவனித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் அவரிடம் வந்து பேசும் போது, அது தொடர்பாக கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். தூரமாக நிற்கும் போதும், கூட்டத்தோடு உட்கார்ந்து பேசும் போது கண்களாலும் செய்கையாலும் பேசுவார்கள். அவர்கள் உங்களை அணுகும் விதத்தில் ஒரு அன்பும் அக்கறையும் இருக்கும். ஒருவேளை அவருக்கு காதலி அல்லது மனைவி இருந்தால், அவர்களிடம் கூட உங்களை அறிமுகம் செய்து வைப்பார்கள். இதுவெல்லாம் நடந்தால், சந்தேகமில்லாமல் அவர்களுக்கும் உங்கள் மீது கிரெஷ் உள்ளது என்று அர்த்தமாகும்.

உங்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் மீது ஆர்வம் பிறக்கும்

ஒருவேளை உங்களுடைய கிரெஷ்க்கும், உங்கள் மீது கிரெஷ் இருந்தால், உங்களை குறித்து நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை அவர்கள் வெளிப்படுத்த துவங்குவார்கள். அதேபோன்று பல நண்பர்கள் சூழ்ந்து இருந்தாலும், உங்கள் மீது தனி கவனம் செலுத்துவார்கள். அதேபோன்று பெண்களாக இருந்தால், கிரெஷ் கொண்ட ஆண்களை அதிகம் வேலை வாங்குவார்கள். அந்த ஆணும் எதுவும் சொல்லாமல் மாங்கு மாங்கு என்று வேலை செய்வான். இதுவரை உங்களுடன் பழக்கத்திலுள்ள நண்பர்களை விடவும், உங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுவார்கள்.

பிரசவத்துக்கு பிறகு எப்போது தம்பதிகள் உறவில் ஈடுபடலாம்..?? மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!!

உங்களிடம் மிகவும் உண்மையாக இருப்பார்கள்

சக ஊழியர்கள், சக நண்பர்கள் உள்ளிட்டவர்கள் உங்களைப் பற்றி பேசினாலோ அல்லது விசாரித்தாலோ உடனடியாக வந்து உங்களிடம் சொல்லி விடுவார்கள். அதன்மூலமாக உங்களுடைய கிரெஷ்க்கு உங்கள் மீது இருக்கும் விருப்பம் வெளிப்படும். அதேபோன்று நீங்கள் ஒருநாள் அலுவலகத்துக்கு வரவில்லை என்றாலோ அல்லது கல்லூரிக்கு வராமல் இருந்துவிட்டாலோ, நம்மை பற்றி பிறரிடம் விசாரிப்பார்கள். முடிந்தாலும் உங்களிடம் நேரடியாக போன் செய்து அல்லது மெசேஜ் செய்து விசாரிப்பார்கள். ஒருவேளை உங்களுக்கு உடல் முடியாமல் போனால், ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணுவார்கள். கூடுதலாக கிரெஷ் இருந்தால், நேரடியாக வந்து உதவக்கூடியவர்களும் உண்டு.

உடலில் திடீர்.... திடீர்...ன்னு மச்சம் வருதா? அலட்சியம் வேண்டாம்... புற்றுநோய் பாதிப்பாகவும் இருக்கலாம்..!!

உங்களை மகிழ்ச்சியாக்க மிகவும் முயற்சி செய்வார்கள்

நீங்க எப்போதும் சந்தோஷத்துடனும் சிரித்த முகத்துடனும் இருப்பதையே உங்களுடைய கிரெஷ் விரும்புவார்கள். அதனால் எப்போதும் உங்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்கள். இதில் செல்லக் கோபம், சிணுங்கல், மகிழ்ச்சியின் வெளிப்பாடு உள்ளிட்டவையும் அடங்கும். மெனக்கெட்டு உங்களை சிரிக்க வைக்கவும் அவர்கள் முயலுவார்கள். அதேபோல வம்பிழுப்பது, ஏமாற்றி விளையாடுவது மற்றும் எதுவும் பேசாமல் உங்கள் அருகில் உட்கார்ந்து இருப்பது போன்றவை, உங்களுடைய கிரெஷ் உங்கள் மீது கிரெஷ்ஷை வெளிப்படுத்தும் செயல்பாடுகளாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios