Asianet News TamilAsianet News Tamil

உடலுறவு முகப்பருவை ஏற்படுத்துமா?

உடலுறவு கொண்டால் முகத்தில் பருக்கள் வரும் என்று பலர் நம்புகிறார்கள். இதிலிருக்கும் அறிவியல் பூர்வமான உண்மை என்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். 
 

effect does sex have on the skin
Author
First Published Feb 8, 2023, 10:13 AM IST

செக்ஸ் தொடர்பாக பலரது மனதில் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. இந்த தொழில்நுட்ப யுகத்தில் கூட இதை வெளிப்படையாக பேச கூச்சமாக உணருகின்றனர். அதன்காரணமாகவே காலந்தொட்டு பாலியல் தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் தொடர்ந்து கொண்டே உள்ளன. உடலுறவு எடை அதிகரிப்பதற்கும் முகப்பருவுக்கும் காரணமாகிறது என்கிற நம்பிக்கை இன்றும் பலரிடம் நிலவுகிறது. உண்மையில், உடலுறவில் ஈடுபடுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது. குறிப்பாக உடலுறவில் ஈடுபடுவதால் உங்கள் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதை தான் அறிவியல் ஆதாரங்கள் உறுதிசெய்துள்ளன.

நீடித்த உடலுறவு முகப்பருவை ஏற்படுத்துமா?

இது ஒரு பெரிய தவறான கருத்து. உடலுறவு ஒருபோதும் முகப்பருவை ஏற்படுத்தாது. ஆனால் உடலுறவின் போது கவனக்குறைவாக இருந்தால் முகப்பருவுடன் சரும பிரச்சனைகளும் ஏற்படும். இவற்றுடன் உடலுறவின் போது சருமத்தை சேதப்படுத்தும் சில விஷயங்களையும் செய்யும் போது, தோல் பாதிக்கப்படுகிறது.

நீடித்த உடலுறவு அதிக வியர்வைக்கு வழிவகுக்கிறது. மேலும், உங்கள் உடலில் இருந்து அதிக எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் எழுந்தால், அது உங்கள் உடல்நலுடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலுறவின் போது சிலர் மசாஜ் எண்ணெய், சருமத்திற்கு பொருந்தாத சில ரசாயனங்கள் கொண்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் முகப்பருவும் ஏற்படுகிறது. ஏனெனில் மசாஜ் ஆயில் பயன்படுத்தும் போது அது உங்கள் துணையின் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். இதை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் பருக்கள் தோன்றி அவதியை தரும்.

உடலுறவின் போது உங்கள் தோலை உங்கள் துணையின் உடல் பாகத்திற்கு எதிராக தேய்ப்பது சருமத்திற்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். நெருக்கம் மூலம், பலர் அடிக்கடி தங்கள் கன்னங்கள், நெற்றியில் தங்கள் துணையின் கைகள், மார்பு, முதுகில் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இதன் காரணமாகவும் உங்கள் சருமம் பாதிக்கப்படலாம்.

கொலாஜன் ஒரு வகை புரதம். இது சருமத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆனால் வயது ஏற ஏற குறைய ஆரம்பிக்கிறது. இது சருமத்தில் வயதான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இருப்பினும், சிலருக்கு, வயதுக்கு ஏற்ப கொலாஜன் அளவு குறைகிறது. இதற்கு மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். மன அழுத்தம் உங்கள் உடலில் கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது கொலாஜன் உற்பத்தியை பாதிக்கிறது. ஆனால் உடலுறவு கார்டிசோல் ஹார்மோனைக் குறைக்கிறது. ஏனெனில் உடலுறவின் போது உடல் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது உங்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும். இது சருமத்தில் உள்ள கொலாஜன் அளவையும் அதிகரிக்கிறது

உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உதவும் 3 வகை உணவுகள்..!!

நம் உடலுக்கு தூக்கம் மிகவும் அவசியம். போதுமான தூக்கம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கும். மேலும் இது உங்கள் மன ஆரோக்கியத்தில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான உடலுறவு உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, மன அழுத்தம் இல்லாத மனம், மகிழ்ச்சியான உறவு இவை அனைத்தும் உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டுவர உதவுகிறது.

உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பது போல, உடலுறவின் போது இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. இது நமது உடலில் போதுமான அளவு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. ஆக்ஸிஜனும் சருமத்தை நன்றாக சென்றடைகிறது. இதனால் சருமம் இயற்கையாக பளபளப்பாக இருக்கும். ஆக்ஸிஜன் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. இது உங்களை அழகாக மாற்றும்
 

Follow Us:
Download App:
  • android
  • ios