நாற்பது வயதை தாண்டிவிட்டால் உடலுறவில் ஆர்வம் இருக்காதா? இது இயல்பானது தானா? டாக்டர்ஸ் சொல்வதென்ன!

பொதுவாக இல்லற வாழ்க்கை என்பது நல்லறமாக மாறுவதற்கு மிக அவசியமான விஷயங்களில் ஒன்றுதான் உடலுறவு. ஆனால் ஒரு வயதை தாண்டி இந்த உடலுறவின் மீதான ஆசைகள் குறைந்து விடுமா?, சரி அது குறித்து வெளியாகும் செய்திகள் உண்மைதானா? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Does age factor affects the sexual relation on male and female what experts say

ஒரு கணவன் மனைவி சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வெகு ஆண்டு காலம் நடத்த, அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யம் என்பது மிக மிக முக்கியம். அதை பல விஷயங்கள் தருகின்றது, அதில் முக்கியமான ஒன்றுதான் உடலுறவு. 

உடல் ரீதியாக கணவனும் மனைவியும் இணைந்திருக்கும் பொழுது அவர்களுக்குள் ஏற்படுகின்ற இன்பமும் அதனால் கிடைக்கின்ற மகிழ்ச்சியும் பல நல்ல விஷயங்களுக்கு வழங்குகிறது என்று கூறப்படுகிறது. அதே சமயம் ஒரு வயதை தாண்டும் பொழுது அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இந்த உடலுறவின் மீதான ஆசைகள் குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. 

இது சம்மந்தமாக வெளியாகும் சில செய்திகளையும் நாம் பார்த்திருப்போம், சரி அது உண்மைதானா என்று கேட்டால் மருத்துவர்கள் சொல்லும் பதில் "இல்லை" என்பதுதான். ஒருவருக்கொருவர் இணைந்து உடல்ரீதியாக இன்பம் காணுவது என்பது எந்த வயதிலும் குறையாது. அது அவர்கள் மனதில் ஏற்படும் மாறுபாட்டை பொறுத்தே அமையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வயதானவர்கள் உடலுறவு கொள்ள கூடாதா?

மருத்துவரின் கூற்றுப்படி ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரிடையே இருக்கும் புரிதலும், அவர்கள் உடல் வலுவுமே அவர்கள் ஒன்றாக இணைவதற்கு போதுமான ஒன்று என்று கூறுகின்றனர். 

சுய இன்பம் கொள்வதால் உடலுறவில் ஆசை இருக்காதா?

இதற்கும் மருத்துவர்கள் தரும் ஒரே பதில், சுய இன்பத்தில் அடிக்கடி ஈடுபடுபவர்களுக்கு, உடல் ரீதியாக இணையும் ஆசை அதிகரிக்குமே தவிர அது குறையாது என்பது தான். ஆகவே உடல் ரீதியாக ஒருவருக்கொருவர் இணைவது என்பது வயதை குறித்து எப்பொழுதும் குறையாது என்பதுதான் மருத்துவர்கள் தரும் பதில்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios