ரப்பர் போல விரியும் டிஸ்பிளே! எல்.ஜி. கொண்டுவரும் வெற லேவல் டெக்னாலஜி!
எல்ஜி நிறுவனம் 50% வரை விரிவடையும் புதிய டிஸ்ப்ளே பேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. மடிக்க, முறுக்க, நீட்ட என பல வழிகளில் பயன்படுத்தக்கூடிய இந்த டிஸ்ப்ளே, அணியக்கூடிய கேஜெட்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும்.
LG stretchable display
நவீன தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2024ஆம் ஆண்டில் மட்டும் பலவித புதிய டிஸ்பிளேக்கள் அறிமுகமாகிவிட்டன. உருட்டக்கூடிய டிஸ்பிளே, மடிக்கக்கூடிய டிஸ்பிளே, கண்ணாடி போல வெளிப்படையாகத் தோன்றும் டிஸ்பிளே என புதுமையான பல கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன.
LG stretchable display
இப்போது, தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. (LG) நிறுவனம் விரிவடையக்கூடிய (stretchable) புதிய டிஸ்ப்ளே பேனலை வெளியிட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 50 சதவிகிதம் வரை விரிவடையும் என்று எல்.ஜி. கூறுகிறது. அதாவது, இந்த டிஸ்பிளேயை மடிக்கலாம், திருகலாக முறுக்கலாம், இழுத்து நீட்டலாம். அதற்கு ஏற்ப டிஸ்பிளே விரிந்து கொடுக்கும்.
LG stretchable display
இந்த டிஸ்பிளேயின் பயன்பாட்டு சாத்தியங்கள் பரந்தவை. இந்த டிஸ்பிளேயை அணியக்கூடிய கேஜெட்களில் பயன்படுத்தலாம்.இது உடலின் வடிவத்திற்கு ஏற்றவாறு ஆடைகளில் இணைக்கலாம். வாகனங்களிலும் இதை பயன்படுத்தலாம். குறிப்பாக, கார் டேஷ்போர்டு வடிவமைப்பில் இது புரட்சியை ஏற்படுத்தும் என்று எல்.ஜி. சொல்கிறது.
LG stretchable display
சியோலில் உள்ள எல்ஜி சயின்ஸ் பார்க்கில் வெளியிடப்பட்ட இந்த டிஸ்பிளே பேனல் 12 இன்ச் அளவுள்ளது. இதை 100 PPI மற்றும் முழு RGB வண்ணங்களுடன் 18 இன்ச் வரை இழுத்து விரிவாக்க முடியும். இந்த நெகிழ்வுத்தன்மையை வழங்க டிஸ்ப்ளேவில் ஒரு சிறப்பு சிலிக்கானை பயன்படுத்துவதாக எல்ஜி கூறுகிறது. இந்த சிலிக்கான் காண்டாக்ட் லென்ஸ்களில் காணப்படுவதைப் போன்றது. இந்த சிலிக்கானுடன் புதிய வயரிங் வடிவமைப்பையும் எல்.ஜி. உருவாக்கியுள்ளது. இது டிஸ்பிளே விரிவடையும்போதும் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்கிறது.
LG stretchable display
மைக்ரோ எல்இடி லைட் தொழில்நுட்பத்தையும் எல்ஜி பயன்படுத்துகிறது. இது வெறும் 40 மைக்ரோமீட்டர்களையும் அளவிடக்கூடியது. இந்த டிஸ்பிளேவை 10,000 தடவைகளுக்கு மேல் இழுந்து நீட்டித்தாலும் தொடர்ந்து நீடித்து உழைக்கும் தன்மையை கொண்டு என எல்.ஜி. தெரிவிக்கிறது. மேலும், இந்த டிஸ்பிளே குறைந்த மற்றும் அதிக வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது. வெளிப்புற அதிர்ச்சிகளையும் தாங்கிக்கொள்ளும் சக்தி கொண்டது எனக் கூறப்படுகிறது.
LG stretchable display
விரிவடையும் டிஸ்பிளே தொடர்பான ஆராய்ச்சியை எல்ஜி பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. முதன்முதலில் 2022இல் இதைபற்றிய தகவலை வெளியிட்டது. 2 ஆண்டுகளில் எல்ஜி டிஸ்பிளேயின் விரிவடையும் தன்மையை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. முதல் அறிவிப்பில் 20% விரிவடையும் தன்மை கொண்டிருக்கும் என்று கூறியது. இப்போது 50% விரிவடையும் தன்மையுடன் அறிமுகம் செய்துள்ளது.