அமேசான் சேல் ஆரம்பம்! தாறுமாறான தள்ளுபடியில் கிடைக்கு்ம ஆப்பிள் தயாரிப்புகள்!
Amazon Great Republic Day Sale Big discounts: அமேசான் குடியரசு தின விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது. இந்தச் சலுகை பிரைம் உறுப்பினர்களுக்கு 12 மணிநேரம் முன்கூட்டியே கிடைக்கும். இந்தத் தள்ளுபடி விற்பனையில் வெகுவாக விலை குறைந்துள்ள ஆப்பிள் தயாரிப்புகள் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
iPhone 15
ஐபோன் 15 விற்பனைக்கு முன்னதாக விலைக் குறைப்பைப் பெற்றது. அசல் விலை ரூ. 69,900, இப்போது தள்ளுபடி விலையில் ரூ.60,499 க்குக் கிடைக்கும். வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஜ் கழிவு உள்பட.
Apple iPad 10th Gen
ஆப்பிள் ஐபாட் 10வது தலைமுறை மாடல் 28% தள்ளுபடியைப் பெறுகிறது. இதன் விலை இப்போது அமேசானில் ரூ.44,900 முதல் ரூ. 32,199 வரை கிடைக்கும்.
Apple Watch Ultra
ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவும் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. ரூ. 26,910 தள்ளுபடியுடன் ரூ.62,900 க்கு வாங்கலாம். SBI கார்டுக்கு ரூ. 1,750 கூடுதல் தள்ளுபடியும் உண்டு.
Apple MacBook Air M1
ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1 (Apple MacBook Air M1) இப்போது 28% தள்ளுபடியுடன் ரூ. 66,990 க்குக் கிடைக்கும். அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு சலுகைகளுடன் கூடுதல் சேமிப்புக்கும் வாய்ப்பு உள்ளது.
Apple AirPods 4 Wireless Earbuds
ஆப்பிள் AirPods 4 வயர்லெஸ் இயர்பட்ஸ், பிரத்யேகமான ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை இப்போது ரூ. 12,823.
Apple 20W USB-C Power Adapter
ஆப்பிள் 20W USB-C பவர் அடாப்டர் இப்போது ரூ.1,592 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அமேசான் தளத்தில் ரூ. 400 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
iPhone 13
ஐபோன் 13 (iPhone 13) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் சலுகை விற்பனையில் ரூ.11,000 வரை தள்ளுபடி கிடைக்கும். 128 GB மாடல் ரூ.48,799 க்குக் கிடைக்கும்.