மனித மூளையில் பிளாஸ்டிக்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. ஷாக் ஆன ஆராய்ச்சியாளர்கள்!
மனித உடலில் பிளாஸ்டிக் எச்சங்கள் காலப்போக்கில் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வில், மூளை மாதிரிகளில் அதிக அளவு மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
Microplastics in Brain Tissue
பிளாஸ்டிக் என்ற பொருள் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்றே சொல்லலாம். உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தெரிந்ததே. ஆனால் சுற்றுசூழல் மட்டுமின்றி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் பிளாஸ்டிக் கேடு என்கின்றனர் மருத்துவர்கள்.
Brain
சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மனித உடலில் பிளாஸ்டிக் எச்சங்கள் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனித நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளில் பிளாஸ்டிக் குவிந்து கிடக்கிறது என்பது தெரிந்த விஷயமாகும்.
Microplastics
ஆனால் சமீபத்தில், மனித உடலிலும் பிளாஸ்டிக் துகள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரேத பரிசோதனையில் இருந்து சேகரிக்கப்பட்ட மனித மூளையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை விட அதிகமான பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Research
இந்த கணக்கீட்டின்படி, மனித உடலில் பிளாஸ்டிக் எச்சங்கள் காலப்போக்கில் அதிகரித்து வருவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக 91 மூளை மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். மற்ற உறுப்புகளை விட மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அதிகம் இருப்பதாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மேத்யூ காம்பன் தெரிவித்துள்ளார்.
Scientist
24 மூளை மாதிரிகளில், மொத்த எடையில் 0.5 சதவீதம் வரை பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களின் மூளையில் பிளாஸ்டிக் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Human Brains
நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் தண்ணீருடன் நானோபிளாஸ்டிக் உடலில் நுழைந்து மூளையை சென்றடைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காற்றில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உடலுக்குள் செல்வதாக கூறப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரை குடிப்பதை குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.