ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? வெளியான முக்கிய அப்டேட்!
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காயத்தால் அவதிப்படும் ஜஸ்பிரித் பும்ரா குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? வெளியான முக்கிய அப்டேட்!
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
உலகக்கோப்பைக்கு அடுத்த பெரிய தொடர் என்பதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தீவிரமாக உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்திய அணியும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் நம்பர் 1 பவுலரான ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? என்பது மதில் மேல் பூனையாக உள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா காயம்
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்ஸின் போது ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் காயம் அடைந்தார். காயத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ள உடனடியாக ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்குச் சென்றார். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீச வரவில்லை. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் அவர் விளையாடவில்லை.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்கள் இறுதி அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) சமர்ப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பும்ராவின் காயம் குறித்து மருத்துவக் குழுவினரின் தகவலுக்கு பிசிசிஐ காத்திருக்கிறது.
கிறிஸ் கெய்ல் சாதனையை தூள் தூளாக்கிய ரோகித் சர்மா; சிக்ஸர் மழையில் புது ரெக்கார்ட்!
சாம்பியன்ஸ் டிராபி
இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா இன்னும் 2 நாட்களில் பெங்களூருவில் உள்ள தேசிய மறுவாழ்வு அகாடமியில் (NCA)பயிற்சி பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஜஸ்பிரித் பும்ரா இரண்டு நாட்களுக்குள் பெங்களூருவில் உள்ள தேசிய மறுவாழ்வு அகாடமியில் (NCA) சேருவார். ஸ்கேன் அறிக்கையைப் பெற்ற பிறகு அவர் ஜிம் மற்றும் லேசான பந்துவீச்சு உள்ளிட்ட லேசான பயிற்சியைத் தொடங்குவார் என்று சில பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பாக பிசிசிஐக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கூறுகையில், ''2023 ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்ட்யா கணுக்காலில் காயம் அடைந்த நிலையில் அவரது உடற்தகுதிக்கு பிசிசிஐ காத்திருந்ந்தது. இதே தான் பும்ரா விஷயத்திலும் நடக்கும். பும்ராவின் உடற்தகுதியின் நிலை, அவர் ஸ்கேன் ரிப்போர்ட் ஆகியவை குறித்து மருத்துவ குழுவினர் வெளியிடும் அறிக்கைகாக பிசிசிஐ காத்திருக்கும்'' என்றார்.
ஜஸ்பிரித் பும்ரா உடல்தகுதி
பும்ராவின் உடற்தகுதி குறித்து இன்னும் முழுமையான ரிப்போர்ட் வெளிவராததால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. இது குறித்து விளக்கம் அளித்த கேப்டன் ரோகித் சர்மா, ''வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் பும்ராவின் ஸ்கேன் மற்றும் அவரது உடல்தகுதி குறித்த அப்டேட்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஸ்கேன் ரிப்போர்ட் கிடைத்தால் தான் எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்'' என்றார்.
இதேபோல் பும்ரா குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா, ''ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதி பெறுவார் என்று நம்புகிறேன். இது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். இது இந்திய அணிக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் நல்லது'' என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மைதானத்தின் மோசமான நிலை: தலையில் பலத்த அடி; ரத்த வெள்ளத்தில் சரிந்த சிஎஸ்கே வீரர்!