சானியா மிர்சாவின் டென்னிஸ் மற்றும் தனிப்பட்ட வாழ்வின் முக்கியமான தருணங்களின் புகைப்பட தொகுப்பு
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 2022 பருவத்துடன் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சானியா மிர்சா, 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்த சானியா மிர்சா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அவரது டென்னிஸ் கெரியர் மற்றும் வாழ்வின் முக்கியமான தருணங்களின் புகைப்படங்களை பார்ப்போம்.
2009ம் ஆண்டு முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் சானியா மிர்சா. 2009 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் இணைந்து பட்டம் வென்றார் சானியா.
அதன்பின்னர் 2012ம் ஆண்டு ஃப்ரென்ச் ஓபன் டென்னிஸிலும் மகேஷ் பூபதியுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.
2014ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸில் பிரேசில் வீரர் ப்ருனோ சோர்ஸுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.
2015ம் ஆண்டு சானியா மிர்சாவுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. 2015ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து விம்பிள்டனில் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.
அதே ஆண்டில் அமெரிக்க ஓபன் டென்னிஸிலும், அதே மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார் சானியா.
2016ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸிலும் மார்டினாவுடன் இணைந்து பட்டம் வென்றார் சானியா மிர்சா.
2016ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸிலும் மார்டினாவுடன் இணைந்து பட்டம் வென்றார் சானியா மிர்சா.
2010ம் ஆண்டு பாகிஸ்தானின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார் சானியா மிர்சா.
2018ம் ஆண்டு அக்டோபர் சானியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது, தனது அந்த குழந்தையுடன் பயணம் செய்வதால் அவனுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுவதையும் சுட்டிக்காட்டித்தான் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சானியா மிர்சா.