பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் பிவி சிந்துவின் சொத்து மதிப்பு இத்தன கோடியா? சொகுசு காரே இவ்வளவா?
PV Sindhu Net Worth : டிசம்பர் 22ஆம் தேதி திருமணத்திற்கு ரெடியான பிவி சிந்துவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம் வாங்க…
PV Sindhu Net Worth, PV Sindhu Luxury Car Collections
ஹைதராபாத்தில் பிறந்த பிவி சிந்து:
PV Sindhu Net Worth : 1995 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் புசர்ல வெங்கட சிந்து (பிவி சிந்து). இவரது அப்பா பிவி ரமணா. அம்மா பி விஜயா. இருவருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். சிந்து தனது குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சிந்துவின் பெற்றோர் இருவருமே தேசிய அளவில் வாலிபால் வீரர்கள். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பிவி ரமணா வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
PV Sindhu, Badminton Player PV Sindhu Education
பிவி சிந்து கல்வி:
இதையடுத்து விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியதைத் தொடர்ந்து ரமணாவிற்கு 2000 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் பிறந்த சிந்து ஆக்ஸிலியம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து செயிண்ட் ஆன் காலேஜில் கல்லூரி படிப்பை முடித்தார். பெற்றோர் அவரை வாலிபால் விளையாட அறிவுறுத்தினாலும் பிவி சிந்து பேட்மிண்டனை தேர்வு செய்தார்.
PV Sindhu, Badminton Player PV Sindhu
பிவி சிந்து பேட்மிண்டன் தேர்வு
அதற்கு புல்லேலா கோபிசந்த் முக்கிய காரணமாக இருந்தார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாது ஓபன் பேட்மிண்டன் தொடரில் புல்லேலா கோபிசந்த் சாம்பியன் பட்டம் வென்றார். அவரது வெற்றியின் உத்வேகத்தால் பேட்மிண்டனை தெர்வு செய்தார். 8 வயது முதல் பேட்மிண்டன் விளையாடி வருகிறார்.
PV Sindhu, Badminton Player PV Sindhu Medals
பிவி சிந்து பதக்கம்:
2009 ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற சப் ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். அப்போது அவருக்கு 14 வயது. அப்படியே ஆரம்பித்தது தான் அவரது பேட்மிண்டன் வாழ்க்கை. இப்போது வரையில் 464 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.
PV Sindhu, Badminton Player PV Sindhu
அதோடு, 205 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறார். 18 முறை பேட்மிண்டன் தொடர்களில் டைட்டில் வென்றுள்ளார். 2016 மற்றும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 2024 ஒலிம்பிக் தொடரில் தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Badminton Player PV Sindhu, PV Sindhu Net Worth
பிவி சிந்து நிகர சொத்து மதிப்பு:
இந்தியாவில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரர்களில் பிவி சிந்துவும் ஒருவர். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.59 கோடி. பிவி சிந்துவின் விளையாட்டு வாழ்க்கை, பிராண்ட் ஒப்புதல் மற்றும் முதலீடு ஆகியவற்றின் காரணமாக சொத்து மதிப்பு ரூ.59 கோடியாக அதிகரித்துள்ளது.
PV Sindhu Luxury Car Collections
பிவி சிந்து கார் கலெக்ஷன்:
பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு பைக் மற்றும் கார் மீது அளவுகடந்த பற்று இருக்கும். அது பிவி சிந்துவிற்கும் பொருந்தும். கார் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ள பிவி சிந்துவிடம் ஹை லெவல் மாடல் கார்கள் எல்லாம் இருக்குதாம். உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதற்காக தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா ரூ.73 லட்சம் மதிப்புள்ள BMW X5 என்ற காரை பரிசாக அளித்தார்.
PV Sindhu Luxury Car Collections
இதே போன்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டில் கடவுள் சச்சின் டெண்டுல்கர் BMW 320D என்ற காரை பிவி சிந்துவிற்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த காரின் விலை ரூ.50 லட்சம் வரையில் இருக்கிறது. மேலும், மஹிந்திரா நிறுவனம் தார் காரை பரிசாக கொடுத்திருக்கிறது.
PV Sindhu Venkata Dutta Sai Marriage, PV Sindhu Brands
பிராண்டுகள்:
தற்போது, பிவி சிந்து, ஏசியன் பெயிண்ட்ஸ், பிரிட்ஜ்ஸ்டோன், ஜான்சன் அண்ட் ஜான்சன், எல்'ஓரியல், லி நிங், ஸ்பின்னி, பாங்க் ஆப் பரோடா ஆகியவற்றின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.
PV Sindhu Future Husband, Who is Venkata Dutta Sai
பிவி சிந்து திருமணம்:
பேட்மிண்டன் வீராங்கனையாக இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் பிவி சிந்துவிற்கு வரும் 22ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத் சாயை திருமணம் செய்ய இருக்கிறார். வெங்கட தத் சாய், ஹைதராபாத்தில் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
PV Sindhu, Badminton Player PV Sindhu Wedding
பிவி சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் திருமண நிகழ்ச்சி 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. உதய்பூரில் 22ஆம் தேதி திருமணம் நடைபெறும் நிலையில் 24ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.