ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகும் ரோகித் சர்மா! ஹர்திக்கு என்ன ஆச்சு?
ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகும் ரோகித் சர்மா! ஹர்திக்கு என்ன ஆச்சு?
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது. . மார்ச் 22 அன்று தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. மே 18ம் தேதி வரை மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி குவாலிபயர் முதல் போட்டி நடக்கிறது. மே 21ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடக்கிறது. மே 23ம் தேதி குவாலிபயர் 2ம் போட்டி நடக்கிறது. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், அனைத்து அணிகளும் கோப்பையை கையில் ஏந்த ஆயத்தமாக உள்ளன. அணியில் ஆடப்போகும் வீரர்கள், எந்த வீரர்கள் எந்த வரிசையில் இறங்க் வேண்டும்? என்பது குறித்த திட்டங்களை இப்போதே வகுக்கத் தொடங்கி விட்டன. ஐபிஎல் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ்.
மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடந்த முறை 14 போட்டிகளில் 10ல் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 23ம் தேதி பரம எதிரியான சிஎஸ்கே அணியை எதிர்த்து விளையாடுகிறது.
முதல் போட்டியை காண மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில், அந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2024 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஐபிஎல் 2025 முழு அட்டவணை! சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் போட்டிகளின் முழு லிஸ்ட்!
ஐபிஎல் 2025
''2024 மே 17 அன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது தனது அணி மெதுவான ஓவர் விகிதத்தை பராமரித்ததால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்டிக் பாண்ட்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஓவர் விகிதக் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ், இந்த சீசனில் மும்பை அணி மூன்றாவது முறையாக மெதுவாக பநதுவீசியதால் பாண்ட்யாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர் அடுத்த ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா- ரோகித் சர்மா
இதன் காரணமாக 2025 ஐபிஎல் சீசனின் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவால் விளையாட முடியாது. இதனால் அந்த ஒரு போட்டிக்கு மட்டும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளன. இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ரோகித் சர்மா கேப்டன்சி செய்வதை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.
'ஐபிஎல் 2025' போட்டிகளின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எப்படி டிக்கெட் முன்பதிவு செய்வது?