- Home
- Sports
- IND vs NZ ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 லைவ் ஸ்ட்ரீமிங்! எந்த டிவி, ஓடிடியில் பார்க்கலாம்?
IND vs NZ ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 லைவ் ஸ்ட்ரீமிங்! எந்த டிவி, ஓடிடியில் பார்க்கலாம்?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டியை எந்த சேனல்? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.

IND vs NZ ICC champions Trophy 2025 Live Streaming: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை (மார்ச் 9) நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன. இந்திய அணி லீக்கில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து அரையிறுதிக்குள் வந்துள்ளது.
இந்தியா vs நியூசிலாந்து இறுதிப்போட்டி
இந்த தொடரில் எந்த தோல்வியையையும் சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். நியூசிலாந்தை பொறுத்தவரை லீக்கில் இந்திய அணியுடன் மட்டும் தோல்வியை தழுவியது. லீக்கில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை பந்தாடி விட்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்திய அணி பேட்டிங், பவுலிங்கில் வலிமையாக உள்ளது. ஸ்பின்னர்கள் அணிக்கு பெரும் பலமாக இருக்கின்றனர்.
குறிப்பாக இந்திய அணி வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின் படைகளை வைத்து நியூசிலாந்தை சாய்க்க ரெடியாக உள்ளது. அதே வேளையில் நியூசிலாந்து அணியையும் குறைத்து எடைபோட முடியாது. இந்திய ஸ்பின்னர்களை மட்டும் சமாளித்து விட்டால் கோப்பை அந்த அணியின் வசமாகி விடும். பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் அந்த அணி டாப் கிளாஸாக உள்ளது.
IND vs NZ சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: தெறிக்க விடப்போகும் 6 இந்திய வீரர்கள்!
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி
இந்தியா vs நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி எப்போது?
இந்தியா vs நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி மார்ச் 9 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இந்தியா vs நியூசிலாந்து இறுதிப் போட்டி எங்கே நடைபெறுகிறது?
இந்தியா vs நியூசிலாந்து இறுதிப் போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இந்தியா vs நியூசிலாந்து இறுதிப்போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்தியா vs நியூசிலாந்து இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நண்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். 2 மணிக்கு டாஸ் போடப்படும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 லைவ் ஸ்ட்ரீமிங்
இந்தியா vs நியூசிலாந்து இறுதிப் போட்டியை எந்த டிவியில் பார்க்கலாம்?
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் நேரடியாக கண்டு ரசிக்கலாம். தமிழில் ஸ்போர்ட்ஸ் 18 தமிழ் சேனல் மற்றும் கலர்ஸ் தமிழ் சேனலிலும் பார்க்கலாம்.
இந்தியா vs நியூசிலாந்து இறுதிப் போட்டியை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
கிரிக்கெட் ரசிகர்கள் இந்த இறுதிப் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்த்து மகிழலாம்.
IND vs NZ: இந்தியா-நியூசிலாந்து இறுதிப்போட்டியை தியேட்டரில் பார்க்கலாம்! டிக்கெட் எவ்வளவு?