IND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா? அடேங்கப்பா!
சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் நாளை மோதுகின்றன. இதில் கோப்பையை வெல்லும் அணிக்கு எத்தனை கோடி பரிசுத்தொகை கிடைக்கும்?, 2ம் இடம்பிடிக்கும் அணிக்கு எத்தனை கோடி கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

IND vs NZ: Champions Trophy Prize Money: மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நிறைவுப்பகுதியை நெருங்கி விட்டது. சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் நாளை (மார்ச் 9) பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2023ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவிய இந்தியா, இந்த முறை அதற்கு அருமருந்தாக சாம்பியன்ஸ் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி பரிசுத் தொகை
மேலும் இதற்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாகவும் இந்த இறுதிப்போட்டி அமைந்துள்ளது. நாளை இரவு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை தூக்கி பிடிக்கப்போவது யார்? என்பது தெரிந்து விடும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்து பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் பரிசுத் தொகையை 53% அதிகரித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வெல்லும் அணி 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20 கோடி) பரிசை அள்ளும். அதாவது நாளை கோப்பையை வெல்லும் அணி மொத்தமாக ரூ.20 கோடியை அள்ளிச்செல்லும்.
IND vs NZ சாம்பியன்ஸ் டிராபி: ஹர்திக் பாண்ட்யா விளையாடவில்லையா? பிளேயிங் லெவன் இதுதான்!
இந்தியா-நியூசிலாந்து இறுதிப்போட்டி
இரண்டாம் இடம் பிடிக்கும் அணி 1.12 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 9.72 கோடி) பெறும். அரையிறுதியில் தோற்ற ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 560,000 அமெரிக்க டாலர்களை (ரூ. 4.86 கோடி) பெறுவார்கள். சாம்பியன்ஸ் டிராபியின் மொத்த பரிசுத் தொகை இப்போது 6.9 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.60 கோடி) உயர்ந்துள்ளது.
சாம்பின்ஸ் டிராபி லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 34,000 டாலர்கள் (ரூ.30 லட்சம்) கிடைக்கும். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்த அணிகள் தலா 3,50,000 டாலர்களை (சுமார் ரூ.3 கோடி) பெறும்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி
ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடித்த அணிகள் 1,40,000 டாலர்களை (சுமார் ரூ.1.2 கோடி) பெறுவார்கள். இந்த தொடரில் பங்கேற்ற எட்டு அணிகளுக்கும் போட்டியில் பங்கேற்றதற்காக குறைந்தபட்சம் 1,25,000 டாலர்கள் (ரூ.1.08 கோடி) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs NZ ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 லைவ் ஸ்ட்ரீமிங்! எந்த டிவி, ஓடிடியில் பார்க்கலாம்?