IND vs NZ சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: தெறிக்க விடப்போகும் 6 இந்திய வீரர்கள்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் நாளை மோதுகின்றன. பைனலில் மாஸ் காட்டப்போகும் 6 இந்திய வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி மார்ச் 9 (நாளை) துபாய் சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த தொடரில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
இந்திய அணியில் விராட் கோலி முதல் முகமது ஷமி வரை ஒவ்வொரு வீரரும் அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில், சில வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறனுடன் ஜொலிக்க வாய்ப்புள்ளது.
விராட் கோலி
1. விராட் கோலி
ஐசிசி பெரிய தொடர் என்றாலே சூப்பர் பேட்டிங்கை வெளிப்படுத்தும் கிங் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியிலும் அசத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 84 ரன்கள் எடுத்தார். 4 போட்டிகளில் 217 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலி ஜொலிக்க வாய்ப்புள்ளது.
முகமது ஷமி
2. முகமது ஷமி
இந்திய அணியின் அனுபவ வீரரான முகமது ஷமி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். இந்த தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியிலும் முகமது ஷமி அசத்த காத்திருக்கிறார்.
இறுதிப் போட்டிக்கான மைதானம் ரெடி – இந்தியா பாகிஸ்தான் மோதிய அதே மைதானமா?
சுப்மன் கில்
3. சுப்மன் கில்
சுப்மன் கில் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் 157 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் கடந்த சில போட்டிகளில் சொதப்பி வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிரடியாக விளையாடக்கூடிய சுப்மன் கில் இறுதிப்போட்டியிலும் மாஸ் காட்ட உள்ளார்.
வருண் சக்ரவர்த்தி
4. வருண் சக்ரவர்த்தி
இந்திய அணியின் மிஸ்டரி ஸ்பின்னரான வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். நியூசிலாந்துக்கு எதிராக லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இந்த தொடரில் இதுவரை 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்த மிஸ்டரி ஸ்பின்னர் ஜொலிக்க வாய்ப்புள்ளது.
கே.எல். ராகுல்
5. கே.எல். ராகுல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக அசத்தி வருகிறார் கே.எல்.ராகுல். வங்கதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று வென்று கொடுத்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 41 ரன்கள் எடுத்தார். முக்கியமான தருணங்களில் அணியை காப்பாற்றி வரும் கே.எல்.ராகுல், இறுதிப்போட்டியிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்.
குல்தீப் யாதவ்
6. குல்தீப் யாதவ்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய குல்தீப் யாதவ், முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தார். சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இறுதிப்போட்டியில் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார்.
IND vs NZ: இந்தியா-நியூசிலாந்து பைனல் ரத்தானால் என்ன நடக்கும்? யாருக்கு கோப்பை கிடைக்கும்?