- Home
- Sports
- இவருக்கு 43 வயசுனு யார் சொன்னது! பாய்ந்து கேட்ச் பிடித்த யுவராஜ் சிங்! ரசிகர்கள் பிரம்மிப்பு!
இவருக்கு 43 வயசுனு யார் சொன்னது! பாய்ந்து கேட்ச் பிடித்த யுவராஜ் சிங்! ரசிகர்கள் பிரம்மிப்பு!
இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 43 வயதிலும் இளம் வீரரை போன்று பாயந்து கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

இவருக்கு 43 வயசுனு யார் சொன்னது! பாய்ந்து கேட்ச் பிடித்த யுவராஜ் சிங்! ரசிகர்கள் பிரம்மிப்பு!
2025ம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. டி20 பார்மட்டில் நடத்தப்படும் இந்த தொடரில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், பிரையன் லாரா, குமார் சங்கக்காரா, ஷேன் வாட்சன் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் நேற்று தொடங்கியது. மார்ச் 16ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.
யுவராஜ் சிங்
நேற்று தொடக்க ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணியும், குமார் சங்கக்காரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணிக்ககாக விளையாடும் 43 வயதான யுவராஜ் சிங் பவுண்டரி லைனின் இளம் வீரர் போன்று பாயந்து கேட்ச் பிடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தார்.
அதாவது இர்ஃபான் பதான் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை இலங்கையின் லஹிரு திரிமன்னே சிக்சர் நோக்கி அடித்தார். அப்போது பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த யுவாரஜ் சிங் வேகமாக ஓடி வந்து அப்படியே அந்தரத்தில் பாயந்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.
IND VS PAK: பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா ரெடி! ரசிகர்கள் குஷி! 2 வீரர்கள் அதிரடி மாற்றம்!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்
43 வயதான யுவராஜ் சிங் துடிப்பான இளம் வீரர்போல் பாய்ந்து கேட்ச் பிடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய முன்னள் அதிரடி வீரரான யுவராஜ் சிங் உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவராக திகழந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஓய்வுபெற்ற இத்தனை ஆண்டுகள் கழித்தும், அதிக வயதிலும் அவர் நல்ல பிட்னஸுடன் இருப்பது இப்போதைய இளம் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது.
''யுவாரஜ் சிங் உங்களுக்கு 43 வயசுனு யார் சொன்னது? நீங்கள் மீண்டும் இந்திய அணிக்கே விளையாடும் அளவுக்கு நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறீகள்'' என்று நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இது குறித்து பேசிய யுவராஜ் சிங், ''மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு வருவது அற்புதமான உணர்வு. இந்த தொடரை நடத்தும் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி'' என்றார்.
இந்தியா மாஸ்டர்ஸ் அணி
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி, இலங்கை மாஸ்டர்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 20 ஓவர்களில் 222/4 ரன்கள் எடுத்தது, குகீரத் சிங் (44), ஸ்டூவர்ட் பின்னி (68), யுவராஜ் சிங் (31 நாட் அவுட்) மற்றும் யூசுப் பதான் (56 நாட் அவுட்) எடுத்தனர். பின்பு விளையாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி 218 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஜோஸ் இங்லிஸ் கலக்கல்! இமாலய இலக்கை சேஸ் செய்து வரலாறு படைத்த ஆஸி.!