- Home
- Sports
- IND vs NZ: இந்தியா-நியூசிலாந்து இறுதிப்போட்டியை தியேட்டரில் பார்க்கலாம்! டிக்கெட் எவ்வளவு?
IND vs NZ: இந்தியா-நியூசிலாந்து இறுதிப்போட்டியை தியேட்டரில் பார்க்கலாம்! டிக்கெட் எவ்வளவு?
திரையரங்கில் அமர்ந்து உங்களுக்குப் பிடித்த ஹீரோவின் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், திரையரங்கில் அமர்ந்து பெரிய திரையில் இந்திய அணி வீரர்கள் ஆடும் ஆட்டத்தை நேரலையில் பார்த்து ரசிக்கும் அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி: இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் வரும் 9ம் தேதி மோதுகின்றன. இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் அற்புதமான அனுபவத்தை கொடுக்கும் விதமாக ஜியோஸ்டார், பிவிஆர் ஐநாக்ஸ் ஒரு புதிய யோசனை செய்துள்ளனர்.
மார்ச் 9 அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை ஜியோஸ்டார், பிவிஆர் ஐநாக்ஸ் வழங்கியுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து இறுதிப்போட்டி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 மீது ரசிகர்கள் காட்டும் ஆர்வத்தை மனதில் வைத்து PVR INOX ஒரு புதிய யோசனை செய்துள்ளது. இந்த மெகா தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் JioStar உடன் பிரத்யேகமாக ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இந்த தொடரிலேயே ஹைவோல்டேஜ் போட்டியான இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தங்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்தது.
இப்போது மீண்டும் அதேபோன்ற ஹைவோல்டேஜ் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு துபாய் மைதானத்தில் இந்திய அணி-நியூசிலாந்து மோதுகின்றன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பது ஆர்வமாக மாறியுள்ளது... இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இதனால் மார்ச் 9 (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதிப் போட்டியை மல்டிபிளக்ஸில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பிவிஆர் ஐநாக்ஸ் தயாராகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் மேட் ஹென்றி விளையாடுவாரா? மிட்செல் சான்ட்னர் விளக்கம்!
பெங்களூரு-ஹைதராபாத்
இந்தியா-நியூசிலாந்து இறுதிப் போட்டியை மல்டிபிளக்ஸில் பார்க்க விரும்புபவர்களுக்காக டிக்கெட் புக்கிங்ஸும் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு டிக்கெட் புக்கிங் ஆப்களில் இந்த டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. திரையரங்கில் எல்லோருடனும் சேர்ந்து பெரிய திரையில் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமென்றால் உடனே டிக்கெட் புக் செய்யுங்கள். ஹைதராபாத்தில் உள்ள PVR INOX மால்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் உள்ள PVR INOX மால்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள PVR INOX திரையரங்குகளில் இந்தியா, நியூசிலாந்து இறுதிப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் உள்ள PVR INOX மால்களில் பைனலை திரையிடுவது குறித்து PVR INOX அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி
இந்தியா, நியூசிலாந்து இறுதிப்போட்டியை காண தியேட்டரின் இருக்கை மற்றும் வசதியை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.200ல் இருந்து தொடங்குகிறது. தியேட்டர், அதன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும்.
தியேட்டரில் பெரிய திரையில், சூப்பர் சவுண்ட் சிஸ்டத்துடன் கிரிக்கெட் போட்டியை பார்ப்பது ஒரு புதிய வித அனுபவம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs NZ: இந்தியா-நியூசிலாந்து பைனல் ரத்தானால் என்ன நடக்கும்? யாருக்கு கோப்பை கிடைக்கும்?