Honeymoon Tips: திருமண நாளில் முதலிரவில் மணப்பெண் கையில் பால் கொடுத்து அனுப்புவது ஏன் தெரியுமா..?
Honeymoon Tips: புதிதாக திருமணமான கணவன் மனைவிக்கு முதல் இரவில் அதாவது தேனிலவு நாளில் ஏன் பால் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான முழு விளக்கத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
Honeymoon Tips
இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் பலவிதமான பாரம்பரிய முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் பொதுவான ஒன்று முதலிரவு அன்று முதல் இரவின் போது மணமகனுக்கு மணமகள் பால் கொண்டு வந்து தருவது. முதலிரவில் பால் குடிப்பது பாரம்பரியம் மட்டுமல்ல. பாலில் உள்ள சுவை, மணம், வெண்மை, போல கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு, முதல் இரவில் பால் கொடுத்து அனுப்பப்படுகிறதாம்.
Honeymoon Tips
இதனால் நல்ல துக்கத்தை உணர முடியும் என்று சிலர் சொல்கிறார்கள். இருப்பினும், இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சிறப்பு பால்
முதலில் இந்த பால் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பார்ப்போம். இது சாதாரண பால் அல்ல, குங்குமப்பூ, சர்க்கரை, மஞ்சள், கருப்பு மிளகு தூள், பாதாம், பெருஞ்சீரகம் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
Honeymoon Tips
பாலியல் தூண்டுதல்:
மஞ்சள் மற்றும் மிளகு நிறைந்த முதல் இரவு பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மேலும், இதனுடன் சேர்க்கப்படும் மிளகு மற்றும் பாதாம் போன்றவை பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க உதவும் இரசாயன சேர்மங்களை வெளியிடுகின்றன.
முதலிரவில் என்ன செய்யும்:
இது கணவன் -மனைவியின் காதலை அதிகரிக்கிறது. பால் குடிப்பதால் நரம்புத் தளர்ச்சி குறைவதோடு, உற்சாகமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இது முதலிரவில் உடலில் உள்ள சோர்வை போக்கி,புத்துணர்ச்சியை தருவதால் முதலிரவு அன்று இருவரும் சிறப்பான தாம்பத்யத்தை அடைய முடியும்.
பாலில் குங்குமப்பூவை சேர்ப்பதற்கான காரணங்கள்
பாலில் சேர்க்கப்படும் குங்குமப்பூ மற்றும் பாதாம் வாசனை ஹார்மோன்களை தூண்டி விடுகிறது. இது தவிர கருமிளகு, பெருஞ்சீரகம், மஞ்சள் ஆகியவை பாலில் கலக்கப்படுகின்றன. இந்த காரணத்திற்காக, இது ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கலவையாக மாறும். பாலில் சேர்க்கப்படும் குங்குமப்பூ மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்கும்.