Relationship Tips: திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் துணையிடம்...இருந்து மறைக்கும் விஷயங்கள் இவைகள் தான்..!
Relationship Tips: உலகில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனிடம் மறைக்கும் சில விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த உலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் ஆசைகள் மற்றும் ரகசியங்கள் இருப்பது உண்மையாகும். பொதுவாக கணவன்- மனைவிக்கு இடையிலான உறவு மிகவும் ஆழமானது. அதுமட்டுமின்றி, இந்த உறவில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது எனவே அவர்கள் ஒருவருக்கொருவர் எதையும் மறைக்கமாட்டார்கள் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால் உறவு அல்லது திருமணத்திற்குப் பிறகு, பெண்கள் மறைக்க முயற்சிக்கும் சில விஷயங்கள் உள்ளன என்பது வெகு சில ஆண்களுக்குத் தெரியும். அப்படி உலகில் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனிடம் மறைக்கும் சில விஷயங்கள் தான் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
பெண்கள் ஆண்களிடம் இருந்து இந்த விஷயங்களை மறைக்கிறார்கள்
சேமிப்பு
திருமணம் அல்லது உறவுக்குப் பிறகு, பெண்கள் தங்கள் துணையிடமிருந்து நிறைய மறைக்கத் தொடங்குகிறார்கள். முதலாவதாக, கணவனின் பணத்தை மறைத்து எடுத்து வைத்து பெண்கள் சில சேமிப்புகளைச் செய்கிறார்கள். அதைப் பற்றி கணவரிடம் நீண்ட நாட்கள் சொல்வதே இல்லை. அதை சில பெண்கள் தன் பெற்றோருக்கு கொடுப்பார்கள்.பல நேரங்களில் இது ஏதேனும் கஷ்டம் என்று வரும்போது பயன்படுகிறது.
முன்னாள் காதல்:
இன்றைய காலத்தில் எல்லாம் காதல், பிரேக்கப் என்பது இயல்பான ஒன்றாகும். இருப்பினும், ஒரு சிலர் தாங்கள் காதலித்த நபரை தங்கள் துணையிடம் சொல்ல மாட்டார்கள். இது உறவில் மோசமான விளைவை ஏற்படுத்துமோ என்கின்ற அச்சம் அவர்கள் மனதில் இருக்கும். அப்படியே ஒருவேளை சொன்னாலும், அவர்களுடன் நெருக்கமாக இருந்தது பற்றி விரிவாக சொல்லமாட்டார்கள். பெண்கள் இந்த விஷயங்களை தங்கள் நண்பர்களிடம் கூறுவார்கள். ஆனால், அவர்கள் இதை தங்கள் துணையிடம் கூற மாட்டார்கள். அதேபோன்று, பெண்கள் பெரும்பாலும் தங்கள் நண்பர்கள் தனக்கு அனுப்பும் மெசேஜ் அல்லது செய்திகளை தங்கள் துணையுடன் கூற மறைக்கிறார்கள்.
ஆபாச படங்கள்:
இன்றைய இன்டர்நெட் காலத்தில் பெரும்பாலானோர் ஆபாச படம் பார்க்கிறார்கள் . ஆண்கள் தாங்கள் பார்க்கும் ஆபாச படங்களை பற்றி பெண்களிடம் வெளிப்படையாக பேசுவார்கள். ஆனால், பெண்கள் அதை பற்றி தன் கணவனிடம் சொல்லமாட்டார்கள். அப்படி சொன்னால், எங்கு தன் கணவன் தன்னை தவறாக நினைப்பாரோ என்கின்ற எண்ணம் இருக்கும்.
தங்கள் ஆசைகளை மறைப்பது:
பெண்கள் சில சமயங்களில் தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக தங்களின் பல ஆசைகளை மனதில் வைத்து அடக்கிக் கொள்வார்கள். பொதுவாக பெண்களுக்கு படுக்கையறையில் ஒரு சில ஆசைகள் இருக்கும், அதை பற்றி கணவரிடம் சொல்வதே இல்லை.மேலும், தங்கள் கணவரை பற்றி ஆழமான புரிதல் கொண்டிருக்கும் பெண்கள் மிகவும் தந்திரமாக இருப்பார்கள். இது அவர்களின் துரோகத்தை மறைப்பதை எளிதாக்குகிறது