உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற... ஃபவுண்டேஷனை எப்படி தேர்வு செய்ய வேண்டும் தெரியுமா?
பொதுவாக ஒவ்வொருவருடைய ஸ்கின் டோன் warm , cool , neutral என மூன்று வகையாக பிரிக்கலாம்...
வாம் ஸ்கின் என்பது, வெளிநாட்டவர்களை போல்... நிறத்தில் உள்ளவர்களுக்கு. கூல் ஸ்கின் டோன் என்பது இந்தியர்களின் ஸ்கின் டோன்... நியூட்ரல் என்பது, பார்பதற்கு வெளிநாட்டவர்கள் போன்றும் இருப்பவர்கள், அதே நேரத்தில் இந்தியராக இருப்பார்கள். அவர்களுடைய ஸ்கின் டோன், சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த மூன்றின் அடிப்படியாக கொண்டு தான் நாம் முகத்தில் போடும் ஃபவுண்டேஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இந்தியர்களின் ஸ்கின் கலரில் இருப்பவர்களின் நிறத்திற்கு ஏற்ற போல் அவர்கள் முகத்தில் போடும் ஃபவுண்டேஷன் வேறுபாடும். இதனை எண்களை வைத்தும் சில எழுத்துக்களை வைத்தும் வேறுபடுத்துவார்கள்.
நீங்கள் பவுண்டேஷன் வாங்க மால்களுக்கு சென்றால், உங்களுடைய கைகளில் தான் டெஸ்ட் செய்வார்கள், ஆனால் இனி அப்படி செய்யாதீர்கள், உங்களின் கன்னத்திலே ஒரு ஓரமாக, காதுக்கு கீழ் பகுதியில் டெஸ்ட் செய்து பாருங்கள்.
சிலருக்கு அவர்களின் கைகளின் நிறம், மற்றும் முகத்தின் நிறம் வேறுபாடும். இதனால் தவறான ஃபவுண்டேஷனை நீங்கள் தேர்வு செய்ய கூடும்.
உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷன் கிரீம் பயன்படுத்தும் போது, அது பார்ப்பதற்கு உங்களின் நிறத்தோடு நன்கு ஒத்து போய் விடும், இயற்கையான நிறம் போலவே தெரியும். அதுவே உங்கள் நிறத்தை விட, லைட் நிறத்திலோ அல்லது டார்க் நிறத்திலோ எடுத்தால் நன்கு வித்தியாசம் தெரியும்.
லைட் நிறத்தில் நீங்கள் தேர்வு செய்திருந்தால், முகத்தில் ஃபவுண்டஷன் போட்டதும், ஆஷ் நிறத்திற்கு மாறுவது போல் தெரியும், அதுவே டார்க் நிறத்தை தேர்வு செய்தால், உங்கள் முகம் கருப்பாக மாறுவது போல் தெரியும். எனவே எவ்வளவு அழகாக நீங்கள் மேக்அப் செய்தாலும் அது நிற மாற்றத்தால் பாழாகிவிடும்.
எனவே... உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷன் நிறத்தை தேர்வு செய்வதன் மூலம், நீங்கள் உங்களின் இயற்கையான நிறத்தோடும், கூடுதல் அழகோடும் தெரியலாம். அதே போல் முதல் முறை, நீங்கள் உங்கள் நிறத்திற்கான ஃபவுண்டேஷன் கிரீம் வாங்கினால் அதனை கடைக்கு போய் தேர்வு செய்வது தான் சிறந்தது. ஆன்லைன் மூலம் வாங்கினால், உங்களுக்கு ஏற்ற நிறம் எது என்பது நீங்கள் தேர்வு செய்வது சற்று கடினமே.