Coffee Benefits : காபி குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 3 விதமான நன்மைகள்..!!
காபி என்கிற புத்துணர்ச்சி பானம் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது, இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மனச்சோர்வைக் குணப்படுத்துகிறது.
coffee cup
காபி என்பது உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கும் திறனுக்காக அறியப்பட்ட ஒரு பானமாகும். பலர் தங்கள் நாளைத் தொடங்கும்போதோ அல்லது நீண்ட சோர்வான நாளைத் தளர்த்தும்போதோ காபி சாப்பிட விரும்புகிறார்கள். சிலருக்கு பாலுடன் சூடான காபி சாப்பிடுவது பிடிக்கும், ஒருசிலருக்கு குளிர்ந்த நிலையில் கிடைக்கும் கோல்டு காபி பிடிக்கும். உடலுக்கு உற்சாகம் தருவது மட்டுமில்லாமல், நீரிழிவு அல்லது மனச்சோர்வு போன்ற பல உடல்நலப் பிரச்னைகளில் இருந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் காபி உதவுகிறது. தினமும் காபி குடிப்பதால் சில நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது
அறிவியல் தகவல் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, காபியில் ஆண்டி ஆக்சிடண்டுகள், அழற்சி எதிர்ப்பு விளைவுகள் போதுமான அளவில் உள்ளன. இதன்மூலம் ஒரு கப் காபி குடிக்கும் போது வகை 2 நீரிழிவு நோயின் பாதிப்பை ஆரம்பத்திலேயே குறைக்க முடியும்.
இதய ஆரோக்கிய மேம்படுகிறது
தினமும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பது இதய செயலிழப்புக்கு எதிராக பாதுகாக்கும் என ஹார்வார்டு ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பக்கவாதம் மற்றும் பிற இருதய நோய்களின் அபாயத்தை குறைப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனச்சோர்வை குறைக்கும்
ஒரு கப் காபி குடிப்பதால் மனச்சோர்வு அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. காபி குடிப்பது அல்லது காஃபின் உட்கொள்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் தொடர்புடையது.