Relationship: பெண்கள் ஆண்களிடம் மறைக்கு சீக்ரெட் என்ன தெரியுமா..? இவை எல்லாம் கூடவா..? ஷாக் ஆகாமல் படியுங்கள்!
Relationship Tips: உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனிடம் மறைக்கும் சில விஷயங்கள் தான் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னென்னெ என்பதை பார்ப்போம்.
இந்த உலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் ஆசைகள் மற்றும் ரகசியங்கள் இருப்பது உண்மையாகும். அதேபோன்று, தம்பதிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாலியல் விருப்பங்கள் இருக்கும். பொதுவாக பல தம்பதிகளுக்குள் திருப்தியான பாலியல் வாழ்க்கை அமைவதில்லை. இது உறவில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.
ஆனால், இது பெரும்பாலும் ஆண்கள் மத்தியில் வெளிப்படுவது உண்டு. ஆனால், பெண்கள் தங்கள் பாலியல் உணர்ச்சிகளை வெளிப்படையாக கணவரிடம் கூறுவது கிடையாது. இது போன்று பல விஷயங்களை பெண்கள் தன் மனதில் ரகசியம் காப்பது உண்டு. அப்படி, உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனிடம் மறைக்கும் சில விஷயங்கள் தான் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
சுயஇன்பம்:
ஒவ்வொரு பெண்ணும் சுயஇன்பம் மேற்கொள்ளும் போது, தன் கணவரிடம் அதை பற்றி வெளிப்படையாக சொல்வது கிடையாது. பெரும்பாலான பெண்கள் இதை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்கள்.பெண்களில் சுய இன்பம் மேற்கொள்வததை பேசும் பற்றி போது நம்முடைய சமூகத்தில் சங்கடமாக உணர்கிறார்கள். எனவே தான் பல பெண்கள் அதை இன்னும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
தங்களின் முன்னாள் உறவு:
இன்றைய காலத்தில் எல்லாம் காதல், பிரேக்கப் என்பது இயல்பான ஒன்றாகும். இருப்பினும், பெண்கள் பொதுவாக, ஆண்களை போல் தாங்கள் காதலித்த நபரை தங்கள் துணையிடம் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். இது உறவில் மோசமான விளைவை ஏற்படுத்துமோ என்கின்ற அச்சம் அவர்கள் மனதில் இருக்கும்.
படுக்கையில் செயல்படுவதை:
சில சமயங்களில் பெண்கள் தங்கள் கணவர்கள் படுக்கையில் செயல்படுவதை பற்றி வெளிப்படையாக பேசுவது கிடையாது. தங்கள் வாழ்வில் பிரச்சினையை உருவாக்குவதைத் தவிர்க்க தங்கள் ஆசைகளை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
புணர்ச்சி:
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு பாலியல் உறவுக்கு முன் விளையாட்டு அதிகம் தேவை. ஆனாலும், பெரும்பாலான மனைவிகள் தங்கள் கணவரிடம் இதைப் பற்றி கூறுவதில்லை. அதேபோன்று, ஆண்கள் தாங்கள் பார்க்கும் ஆபாச படங்களை பற்றி பெண்களிடம் வெளிப்படையாக பேசுவார்கள். ஆனால், பெண்கள் அதை பற்றி தன் கணவனிடம் சொல்லமாட்டார்கள்
அதிக செக்ஸ் டிரைவ்:
பெண்கள் சில சமயங்களில் தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக தங்களின் பல ஆசைகளை மனதில் வைத்து அடக்கிக் கொள்வார்கள். பொதுவாக பெண்களுக்கு படுக்கையறையில் ஒரு சில ஆசைகள் இருக்கும், அதை பற்றி கணவரிடம் சொல்வதே இல்லை.மேலும், தங்கள் கணவரை பற்றி ஆழமான புரிதல் கொண்டிருக்கும் பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் தந்திரமாக இருப்பார்கள்.