வழக்கமான உடலுறவால் பெண்களுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்! என்னென்ன தெரியுமா?
உடலுறவு என்பது உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. எனவே வழக்கமான உடலுறவால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
உடலுறவால் ஏற்படும் நன்மைகள்
இன்றைய காலக்கட்டத்தில் கூட செக்ஸ் என்பது பேசுவதற்கு கூச்சப்படும் டாபிக்காகவே உள்ளது. உடலுறவு பற்றி பேசவே நம்மில் பலரும் தயங்குகிறோம். ஆனால் உடலுறவு என்பது உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. எனவே வழக்கமான உடலுறவால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இதய நோய் ஆபத்து குறைவு
வழக்கமான உடலுறவு பெண்களுக்கு இதய நோய் போன்ற பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. சில பெண்களுக்கு, உடலுறவு மன அழுத்தத்தைப் போக்க சிறந்த வழியாகும். உடலுறவின் போது மூளையில் டோபமைன்கள் அதிகரித்து மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவு குறைகிறது. மேலும் ஆக்ஸிடாசின் வெளியாகி மகிழ்ச்சியை அதிகரிக்கும். இதனால் உடலுறவு கொள்வதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது.
ரத்த அழுத்தம் குறையும்
உயர் ரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு, ஆபத்தான இதய பிரச்சனைகள் ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தம் பெண்களின் கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. குறைந்த சிஸ்டாலிக் இரத்த அழுத்த அளவீடுகளுடன் உடலுறவுக்கு தொடர்புள்ளது. எனவே வழக்கமாக உடலுறவு கொள்வதால் பெண்களின் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.
தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்
உடலுறவில் உச்சக்கட்டத்திற்குப் பிறகு, ப்ரோலாக்டின் என்ற ஹார்மோன் வெளியிடப்படுகிறது, இது தளர்வை ஏற்படுத்துகிறது. பாலியல் செயல்பாடுகளில் தவறாமல் பங்கேற்கும் பெண்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கிறது. தூக்கமின்மை உள்ள பெண்களுக்கு வழக்கமான உடலுறவில் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
மனச்சோர்வு நீங்கும்
உடலுறவு செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் மகிழ்ச்சியை உருவாக்க உதவுகிறது. எனவே வழக்கமான உடலுறவு கொள்ளும் பெண்களுக்கு மனச்சோர்வு நீங்குகிறது. எனவே முதுமையில் பெண்கள் சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டைக் கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வழக்கமான உடலுறவு நோயெதிர்ப்பு மண்டலத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வுகள் காட்டுகின்றனர். உடலுறவு, உடலில் இம்யூனோகுளோபுலின் ஏ (IgA) உற்பத்தியைத் தூண்டுகிறது. நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவும் ஒரு ஆன்டிபாடியாகும்.
பக்கவாதம் ஆபத்து குறைவு
உடலுறவும் ஆரோக்கியமும் நெருங்கிய தொடர்புடையவை. ஒரு ஆய்வில், திருப்திகரமான பாலியல் வாழ்க்கையைக் கொண்டிருந்த பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைந்தது. உடலுறவின் போது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகரிக்கும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வழக்கமான உடலுறவு பெண்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
இடுப்பு தசை வலுவாகும்
இடுப்புத் தளத் தசைகளை வலுப்படுத்துவது, சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் குடல்களை ஆதரிப்பதில் உடலுறவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இடுப்புத் தளத் தசைகளை பலப்படுத்துகிறது. வழக்கமான உடலுறவில் இந்த தசைகள் உடலுறவின் போது உடற்பயிற்சி செய்யப்படுவதால் அவை பலப்படுத்தப்படுகின்றன.
வலி நிவாரணி
உடலுறவின் போது வெளிப்படும் எண்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணியாகவும், மன அழுத்த நிவாரணியாகவும் செயல்படும். சில பெண்கள் உடலுறவுக்குப் பிறகு தலைவலி, மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் பிற உடல் வலிகளில் இருந்து தற்காலிக நிவாரணம் பெறுகிறார்கள்.