உடலுறவின் போது இதுதான் ரொம்ப முக்கியம்.. தம்பதிகளே தயவுசெய்து இதை மறக்காதீங்க..
உடலுறவின் போது தம்பதிகளுக்கு தகவல் தொடர்பு ஏன் அவசியம் என்பதை பார்க்கலாம்.
திருமண உறவின் அனைத்து அம்சங்களிலும் தகவல் தொடர்பு என்பது மிகவும்அவசியம். ஒருவரையொருவர் புரிந்துகொள்வது முதல், கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது, எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது அல்லது ஆசைகளை நிறைவேற்றுவது என அனைத்திற்குமே வெளிப்படையான தகவல் தொடர்பு முக்கியம். எனினும் பலர் தங்கள் துணையிடம் பாலியல் தேவைகள் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். ஆனால் அனைத்து தம்பதிகளும் வெளிப்படையான நேர்மையான முறையில் பேசுவது திருமணம் உறவில் நிச்சயம் சிக்கல்களை தவிர்க்க உதவும். எனவே உடலுறவின் போது தம்பதிகளுக்கு தகவல் தொடர்பு ஏன் அவசியம் என்பதை பார்க்கலாம்.
நம்பிக்கையை வளர்க்கிறது: உங்கள் துணையுடன் நெருங்கிப் பழகுவதில் உங்களுக்கு தடைகள் இருக்கலாம். உங்கள் ஆழ்ந்த உணர்வுகள் மற்றும் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் திறன் அல்லது உங்கள் பயத்தை போக்க உதவும். மேலும் உங்கள் துணையை நீங்கள் முழுமையாக நம்புவதையும் உங்கள் உண்மையான முகத்தை அவர்களிடம் வெளிப்படுத்துவதையும் உணர்த்துகிறது.
பாதுகாப்பு கவலைகள்: நீங்கள் அல்லது உங்கள் துணையும் ஏதேனும் பாலியல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது கண்டறியப்பட்டால், மற்றவருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். மேலும், உடலுறவின் போது உங்களுக்கு வலி அல்லது எரிச்சல் ஏற்பட்டால், அதை உங்கள் துணையிடம் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் நெருக்கமான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து அமைதியாக இருப்பது கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தும். அதை தவிர்க்க நீங்கள் வெளிப்படையாக பேசுவது நல்லது.
உங்கள் துணையின் எதிர்பார்ப்புகளை அறிந்திருத்தல்: உங்கள் துணையிடம் எதுவும் சொல்லாமலேயே அவர் உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதுவது தவறு. ஆசைகள் மற்றும் கற்பனைகள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால், நீங்கள் இதுகுறித்து வெளிப்படையாக உங்கள் துணையிடம் பேச வேண்டும். தயக்கத்துடன் இருப்பதால் உங்கள் இருவரிடையேயும் பிணைப்பு இருக்காது. ஆனால் அதே நேரம் உங்களுக்கு எது பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதை அவர்களிடம் வெளிப்படையாக கூற வேண்டும்.
எனவே நீங்கள் எவ்வளவு வருத்தமாக இருந்தாலும், உங்கள் துணையின் பாலியல் கற்பனைகளுக்காக அவரை மதிப்பிடுவதையும் அவரது உடலைப் பற்றி அவமானப்படுத்துவதையும் தவிர்க்கவும்.
Sexual Relationship
மாறாக, பொறுமையாக அவர்கள் சொல்வதை பொறுமையாக கேளுங்கள். அவர்களுக்கு உங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதையும் புரிய வையுங்கள். மேலும் உங்கள் துணையைப் பாராட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் திருமண உறவின் பிணைப்பு வலிமையாவதுடன் இருவரிடையேயான அன்பும் காதலும் அதிகரிக்கும்..