கோபத்தில் இருந்தாலும் உங்கள் துணையிடம் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்லாதீங்க.. உறவு மேலும் மோசமாகும்..
நீங்கள் கோபத்தில் இருந்தாலும் உங்கள் துணையிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள் குறித்து பார்க்கலாம்.
நாம் பேசும் முன்பு யோசித்து பேச வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே நமக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. சிலர் மட்டுமே இதைப் பின்பற்றுகிறார்கள், பலர் தங்களுக்குத் என்ன தோன்றுகிறதோ அதையே பேசும் வழக்கத்தைத் தொடர்கிறார்கள். அதிலும் கோபம் வந்துவிட்டால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே, வார்த்தைகளை கொட்டிவிடுவார்கள். இருப்பினும், சில வார்த்தைகளை கோபத்தில் கூட பேசக்கூடாது.
கோபத்தில் பேசும் வார்த்தைகள் பெரும்பாலும் கடுமையாக இருக்கும். அவை ஒருபோதும் மனதில் இருந்து மறையாது. எனவே, எந்த நேரத்திலும் சில வார்த்தைகளைச் சொல்லாமல் இருக்கப் பழக வேண்டும். உறவுமுறை நன்றாக இருக்க வேண்டும் என்றால் கோபப்படாமல் இருக்கவும், ஒருவித கெட்ட வார்த்தைகளை பேசாமல் இருக்கவும் பழக வேண்டும். இத்தகைய வார்த்தைகள் ஆழமாக காயப்படுத்துகின்றன. மேலும், உங்கள் நோக்கத்தை எதுவும் நிறைவேற்றாது. நீங்கள் கோபத்தில் இருந்தாலும் உங்கள் துணையிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள் குறித்து பார்க்கலாம்.
Tips to find fake relationship
எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்பது போன்ற வார்த்தைகளை ஒருவரிடம் சொல்வது அதிகப்படியான நிராகரிப்பைக் காட்டுகிறது.அவர்கள் உங்களை மன்னித்தாலும், அவர்களால் வார்த்தைகளை மறக்க முடியாது. ஓவர் ரியாக்ட் பண்ண வேண்டும் என்று கூறுவது ஒருவரை எரிச்சலூட்டும் வார்த்தையாகும். வாக்குவாதத்தின் நடுவில் இப்படிச் சொன்னால், அந்தச் சூழ்நிலையில் அவர்கள் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று சொல்வது போலவும், அவர்களின் உணர்வுகளை அவமதிப்பது போலவும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் அணுகுமுறை உள்ளது, உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.
கோபத்தில் எனக்கு கவலையில்லை என்று சொல்வது பலருடைய குணம். ஆனால், யாரிடமாவது பேசும் போது இதைச் சொன்னால், நீங்கள் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று அர்த்தம். இது ஒரு தற்காப்பு அறிக்கை என்றாலும், இது ஒரு மோசமான தகவல்தொடர்பு வடிவம். மற்றவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.
பொதுவாக தம்பதியினருக்கு இடையே சண்டை ஏற்படும் போது, நீங்களும் அவர்களை போல தான் என்று கூறுவார்கள். இது உங்கள் துணைக்கு கடுமையாக பாதிக்கும். எனவே எதிர்மறையான ஒப்பீடு ஒருபோதும் சரியானதல்ல.
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்பது போன்ற வாக்கியங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது அவர்களை அதிகமாக கோபப்படுத்தக்கூடும். இதனால் உறவு மேலும் மோசமடையலாம்..