- Home
- Gallery
- ஆர்சிபி-க்கு கூட கிடைக்காத டைட்டிலை தட்டிதூக்கிய TTF! மஞ்சள் வீரனை தொடர்ந்து 2வது பட அறிவிப்பை வெளியிட்ட வாசன்
ஆர்சிபி-க்கு கூட கிடைக்காத டைட்டிலை தட்டிதூக்கிய TTF! மஞ்சள் வீரனை தொடர்ந்து 2வது பட அறிவிப்பை வெளியிட்ட வாசன்
பிரபலமான யூடியூப்பரான டிடிஎப் வாசன் மஞ்சள் வீரன் படத்தை தொடர்ந்து தான் நடிக்க உள்ள இரண்டாவது பட டைட்டிலை அறிவித்து இருக்கிறார்.

TTF Vasan
சினிமா பிரபலங்களுக்கு நிகராக யூடியூப்பர்களும் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூப்பில் பைக் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு பேமஸ் ஆனவர் தான் டிடிஎப் வாசன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. யூடியூப்பில் எந்த அளவுக்கு பேமஸ் ஆக இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார் வாசன். குறிப்பாக அதிவேகமாக பைக் ஓட்டியதாக கோவையில் இவர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர்.
Youtuber TTF Vasan
பின்னர் போலீசையே விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய வாசன், கடந்த ஆண்டு பைக்கில் வீலிங் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினார். இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சிறையிலும் அடைத்தனர். பின்னர் அவரின் லைசன்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள்... Actress Roshni : மாடர்ன் டிரஸ்.. அசத்தும் போஸ்.. கண்களால் கைது செய்யும் ரோஷ்ணி ஹரிப்ரியன் - லேட்டஸ்ட் பிக்ஸ்!
TTF Vasan movies
இதுதவிர அண்மையில் போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக மதுரையில் வைத்து கைது செய்யப்பட்ட வாசன், பின்னர் விடுவிக்கப்பட்டார். இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் வாசன், சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் முதல் படமான மஞ்சள் வீரன் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் ஷூட்டிங்கே இன்னும் தொடங்கப்படவில்லை. மஞ்சள் வீரன் பட நிலைமையே என்னவென்று தெரியாத நிலையில், டிடிஎப் வாசன் நடிக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Manjal Veeran
அதன்படி அவர் நடிக்கும் இரண்டாவது படத்தை கருணாகரன் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பிச்சுமணி ஒளிப்பதிவு செய்ய அஷ்வின் விநாயகமூர்த்தி இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கிருஷ்ணா மேற்கொள்கிறார். இப்படத்தை ராதா பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் மதன் கிருஷ்ணன் தயாரிக்கிறார்.
TTF Vasan IPL Movie
இப்படத்தின் ஹைலைட்டே அதன் டைட்டில் தான். அதன்படி டிடிஎப் வாசனின் இரண்டாவது படத்துக்கு ஐபிஎல் என பெயரிடப்பட்டு உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆர்சிபி 17 ஆண்டுகளாக போராடிய டைட்டிலை டிடிஎப் வாசன் கைப்பற்றிவிட்டாரே என ட்ரோல் செய்து மீம் போட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Arjun : "சார் இல்ல மாமனார்".. மகளை கலாய்த்த ஆக்ஷன் கிங் - செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா உமாபதி - Video!