Biriyani man : பிரியாணி மேனுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த போலீஸ்.! இப்போ என்ன வழக்கில் கைது தெரியுமா.?
பிரபல யூடியூப்பர் பிரியாணி மேன் என்கிற அபிஷேக் ரபியை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், தற்போது கிறிஸ்தவ மதத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
biriyani man
சமூகவலைதளமும்- வதந்தியும்
சமூகவலைதளத்தின் வளர்ச்சி ஒருபக்கம் நல்ல விஷயங்களுக்கு பயன்படுகிறது என்றால் மறு பக்கம் மோசமான காரியங்களுக்கும், அடுத்தவர்களை விமர்சிப்பதிலும், பொய் தகவலை பரப்புவதிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. சமூகவலைதளம் மூலம் ஒருவரை ஹீரோவாகவும் அதே சமூகவலைதளம் வில்லனாகவும் சித்தரிக்கும். எனவே சமூகவலைதளத்தில் வரும் சம்பவங்களை பெரும்பாலான மக்கள் உண்மை என நம்பும் நிலை உள்ளது. இதனை பயன்படுத்தி பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றனர்.
Briyani man
அவதூறு கருத்து- தற்கொலை மிரட்டல்
எனவே பொய்யான மற்றும் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இது போன்று போலியான தகவல்களை வெளியிடுபவர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் பிரியாணி மேன் என்றழைக்கப்படும் அபிஷேக் தனது யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து அவதூறான கருத்துகளை வெளியிடுவதும், ஆபாச கருத்துகளை பதிவிட்டும் வந்தார். குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள செம்மொழி பூங்காவை விபச்சாரம் நடைபெறும் இடம் என வீடியோ பதிவிட்டிருந்தார்.
Briyani man
பிரியாணி மேன் கைது
மேலும் யூடியூப்பர் இர்பான் மற்றும் டெய்லர் தொழில் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வரும் பெண்ணையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நேரலையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் தான் பெண் ஒருவர் கொடுத்த புகாரில் பிரியாணி மேனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
briyaniman
மாற்று மதத்திற்கு எதிரான கருத்து
இந்தநிலையில் மீண்டும் பிரியாணி மேனுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் மீண்டும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக வந்த புகாரையடுத்து சிறையில் உள்ள பிரியாணி மேனை சென்னை மண்டல் சைபர் கிரைம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.